மொஹரம்: அரசு விடுமுறை தேதி வரும் 24-க்கு மாற்றம்- வெள்ளி கிழமை வேலைநாள்...! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2015

மொஹரம்: அரசு விடுமுறை தேதி வரும் 24-க்கு மாற்றம்- வெள்ளி கிழமை வேலைநாள்...!

இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் மொஹரம் தினமானது, வரும் 24 ஆம் தேதி (சனிக்கிழமை) வருவதால், அன்றைய தினம் விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.முன்னதாக, தமிழக அரசு ஆண்டுதோறும் வெளியிடும் அரசு விடுமுறைப் பட்டியலில் மொஹரம் அக்டோபர் 23 ஆம் தேதி எனவும், அன்றைய தினமே அரசுவிடுமுறை எனவும் தெரிவித்திருந்தது.


இதுகுறித்து, தமிழக அரசின் பொதுத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:


அரசு தலைமை ஹாஜியின் தகவலைத் தொடர்ந்து, மொஹரம் விடுமுறை தேதி மாற்றப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் ஆண்டு மொஹரம் மாதத்தில் தொடங்குகிறது. மொஹரத்தின் முதல் நாள் என்பது வானில் தெரியும் முழு நிலவைப் பொருத்தே கணக்கிடப்படுகிறது. நிலவு தெரியும் நாள் முதல் நாள்எனவும், அந்த நாளில் இருந்து 10 ஆவது நாளே மொஹரம் நாள் என்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.


இந்த 10 நாட்களிலும் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவார்கள். மேலும், ஒன்பது- பத்தாவது நாள்களில் நோன்பு இருப்பர்.நிலவு தெரிந்தது எப்போது: தமிழகத்தில் முழு நிலவு தெரிந்தது கடந்த 14 ஆம் தேதியாகும். எனவே, அன்றைய தினத்தில் இருந்து பத்தாவது நாளானஅக்டோபர் 24 ஆம் தேதி மொஹரம் கடைபிடிக்கப்படுவதால், அன்றைய தினம் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக தலைமைக் காஜி கடிதம்வாயிலாகத் தெரிவித்திருந்தார்.அவரது கோரிக்கையை ஏற்று, வரும் 24 ஆம் தேதியன்று மொஹரம் கடைபிடிக்கப்படும். அன்றைய தினமே அரசு விடுமுறை விடப்படும்.


அக்டோபர் 13 ஆம் தேதியன்று முழுநிலைவு தெரியும் என்று முன்னர் கணக்கிடப்பட்டதால், மொஹரம் வரும் 23 என்று அறிவிக்கப்பட்டிருந்தது.முழு நிலவு தெரிந்த தேதி மாறியதால், இப்போது மொஹரம் வரும் 24 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுவதாக தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி