இன்று செவிலிய பட்டயப்படிப்பு கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2015

இன்று செவிலிய பட்டயப்படிப்பு கலந்தாய்வு

செவிலிய பட்டயப்படிப்புக்கான இறுதி கட்ட கலந்தாய்வு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.தமிழகத்தில் உள்ள 23 அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் உள்ள 2,100 இடங்களுக்காக நடைபெற்ற இரண்டு கட்ட கலந்தாய்வின் முடிவில்71 காலியிடங்கள் ஏற்பட்டன.இந்த இடங்களுக்கான இறுதி கட்டக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.


இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க 247 மாணவிகளுக்கும் தனித்தனியாக அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் அட்டவணைப்படி கலந்தாய்வில் பங்கேற்கலாம்.செவ்வாய்க்கிழமை காலை 9 மணி கலந்தாய்வு தொடங்கும். இதில் பங்கேற்போர் தங்கள் அசல் சான்றிதழுடன் பங்கேற்க வேண்டும் என தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் விவரங்களுக்கு: www.tnhealth.org

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி