"பிளஸ்2 காலாண்டுத் தேர்வில் பரிமாற்ற முறை மதிப்பீடு கூடாது' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2015

"பிளஸ்2 காலாண்டுத் தேர்வில் பரிமாற்ற முறை மதிப்பீடு கூடாது'

பிளஸ்2 காலாண்டுத் தேர்வில் மாணவர்களின் விடைத்தாள்களைப் பரிமாற்றமுறையில் மதிப்பீடு செய்யக்கூடாது என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதுதொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டச் செயலர் த.பாபுசெல்வன், தலைவர் பெ.சண்முகப்பாண்டியன், பொருளாளர் சு.வேல்முருகன் ஆகியோர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் அளித்துள்ள மனு:


திருநெல்வேலி மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் இம் மாதம் நடைபெறும் பிளஸ்2 காலாண்டு தேர்வில் மாணவர்களின் விடைத்தாள்களை பறிமாற்றம் செய்து மதிப்பீடு செய்ய அனுமதிப்பதை ரத்து செய்ய வேண்டும். அந்தந்த பள்ளிகளின் முதுநிலை பாட ஆசிரியர்களே விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.அரசாணையோ, பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள் எதுவும் இல்லாத நிலையில் சேரன்மகாதேவியில் ஒரு பள்ளியில் ஆசிரியர்களின் வருகைப்பதிவை பயோ மெட்ரிக் முறையில் நடைமுறைப்படுத்துவது கண்டனத்துக்குரியதாகும். மேலும், ஆவரைக்குளம் பள்ளியின் முதுநிலை ஆசிரியரை தாற்காலிக பணியிட நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என மனுவில்குறிப்பிடப்பட்டிருந்தது.

1 comment:

  1. RAMANATHAPURAM DISTRICT IL KADANTHA 4 VARUDANGALAGA INTHE NADAIMURAITHAAN ULLATHU.NEENGALUM FOLLOW PANNUNGAPPA.REVIEW VAIKKA SOLLI 17(B) OR (A) VALANGA SOLLUNGAPPA.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி