பள்ளி மாணவர்களுக்கு 3 மாதங்களுக்குள் ஜாதி, வருமானச் சான்று வழங்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2015

பள்ளி மாணவர்களுக்கு 3 மாதங்களுக்குள் ஜாதி, வருமானச் சான்று வழங்க உத்தரவு

பள்ளி மாணவ, மாணவியருக்கு 3 மாதங்களுக்குள் ஜாதி, வருமான, இருப்பிடச் சான்றுகளை வழங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள், கூட்டுறவு சங்கங்களில்உள்ள பொதுசேவை மையங்கள் மூலம் ஜாதி, இருப்பிட, வருமானச் சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு படிக்கும் காலத்திலேயே பள்ளிகள் மூலம் சான்றிதழ்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


குறிப்பாக 6, 10, பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியர் மேல்படிப்புக்காக பிற பள்ளிகள், கல்லூரிகளுக்குச் செல்ல நேரிடும். மேலும், 10, பிளஸ் 2 வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யப்படுகிறது.


இதுபோன்ற நேரங்களில், கல்வி சான்றிதழ்களுடன், ஜாதிச் சான்றும் முக்கியத் தேவையாக உள்ளது.அதேபோல் மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையைப்பெற ஜாதி, வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றுகள் மிகவும் அவசியம். இந்த சான்றுகள் கிடைக்காத மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற முடியாமல், கல்வியைப்பாதியில் விடும் நிலை ஏற்படலாம்.இதை தவிர்ப்பதற்காக பள்ளிகள் மூலமே மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு பள்ளியிலும்மாணவ, மாணவியரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவாய்த் துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.


அவற்றை வருவாய்த்துறை அதிகாரிகள் முறையாக விசாரித்து சான்றிதழ்களை அளித்து வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டு 6, 10, பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு 3 சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டியுள்ளது. அதனால், இந்த ஆண்டு மாணவர்களுக்கு 3 மாதங்களுக்குள் 3 சான்றிதழ்களையும் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மாணவ, மாணவியரின் விவரங்களைச் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி