அமராவதி நகர் ராணுவப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2015

அமராவதி நகர் ராணுவப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம், உடுமலை, அமராவதி நகரில் உள்ள ராணுவப் பள்ளியில் 2016-17 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, பள்ளி நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் ஒருங்கிணைந்து நடத்தும் இந்த உண்டு உறைவிடப் பள்ளியில் 2016-2017 ஆம் கல்வியாண்டில் 6, 9-ஆம் வகு ப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தற்போது, சேர்க்கை விண்ணப்பங்கள் பள்ளியில் விநியோகிக்கப்படுகின்றன. விளக்க குறிப்பேடும், விண்ணப்ப படிவமும்பெற விரும்புவர்கள் பொதுப் பிரிவு, படைத் துறையைச் சேர்ந்தவர்கள்ரூ. 650-க்கும், தாழ்த்தப்பட்ட இனத்தவர், பழங்குடி வகுப்பினர் ரூ. 500-க்கும் (இதில் பதிவு கட்டணம், பழைய வினாத்தாள், பள்ளியின் குறுந்தகடு, அஞ்சல் செலவும் அடங்கும்) அமராவதி நகர் ஸ்டேட் வங்கியில் கிளை எண் 2191-இல் பெறத்தக்க வகையில் முதல்வர், சைனிக் பள்ளி அமராவதி நகர் என்ற பெயரில் வரைவோலை (டிடி) எடுத்து அனுப்ப வேண்டும்.வரைவோலையுடன், சுய விலாசமிட்ட கடித உறை ஒன்றும் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பமும், குறிப்பேடும் அக்டோபர் 12 முதல் நவம்பர் 21 ஆம் தேதி வரை வழங்கப்படும்.மேலும், www.sainikschoolamaravathinagar.edu.in என்ற அமராவதி நகர் சைனிக் பள்ளி இணையதளத்திலும் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து பதிவுக் கட்டணத்தை படிவத்தோடு சேர்த்துக் கட்டலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர்-642102. உடுமலை வட்டம், திருப்பூர் மாவட்டம் என்ற முகவரிக்கு நவம்பர் 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 3-01-2016 அன்று நுழைவுத் தேர்வுகள் நடை பெறும். மேலும், விவரங்களுக்கு 04252-256246,256296 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி