மேல்நிலை எழுத்தர் தேர்வு: இணையதளத்தில் நுழைவுத் சீட்டுக்களை பதிவிறக்கம் செய்ய அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2015

மேல்நிலை எழுத்தர் தேர்வு: இணையதளத்தில் நுழைவுத் சீட்டுக்களை பதிவிறக்கம் செய்ய அறிவிப்பு

புதுச்சேரியில் நடைபெறவுள்ள மேல்நிலை எழுத்தர் தேர்வுக்கான நுழைவு சீட்டுக்களை (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பணியாளர் நலத்துறை செயலாளர் டாக்டர் எஸ்.சுந்தரவடிவேலு தெரிவித்துள்ளார்.


புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் 500 மேல்நிலை எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு வரும் 25.10.15 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 முதல் 12 மணி வரை நடக்கிறது.இப்போட்டித் தேர்வில் பங்கேற்க மொத்தம் 33,617 பேர் விண்ணப்பித்துள்ளனர். மனுதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலை, குறித்து புதுச்சேரி அரசு ஆள்சேர்ப்பு இணையதளம் https:recruitment.puducherry.gov.in என்ற இணையதள முகவரியில் அறியலாம்.மேலும் தகுதியான மனுதாரர்கள் தங்கள் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை மேற்கூறிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றார் சுந்தரவடிவேலு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி