ஆய்வு கூட்டத்தில் அவதூறாக பேசிய அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி கண்டித்து தலைமை ஆசிரியர்கள் வெளிநடப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2015

ஆய்வு கூட்டத்தில் அவதூறாக பேசிய அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி கண்டித்து தலைமை ஆசிரியர்கள் வெளிநடப்பு

செய்யாறு தனியார் பள்ளியில் மாவட்ட அளவில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்றம்குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகள் வாரியாக தேர்ச்சி சதவிகிதம் குறித்து புள்ளி விவரங்களுடன் கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டு வந்தார்.


கூட்டம் மாலை வரை நடைபெற்றது. அப்போது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாநில திட்ட அதிகாரியை கண்டித்து குரல் எழுப்பியபடியே கூட்ட அரங்கைவிட்டு வெளியேறினர். இதுகுறித்து, நிருபர்களிடம் தலைமை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகள் ஆலோசனை செய்யாமல் கொச்சையாக ஒருமையில் பேசினால் எவ்வளவு நேரம் பொறுத்துக்கொள்ள முடியும். மாநில அதிகாரிகள் இப்படி தரக்குறைவாக நடத்தினால் கல்வித்துறையிலும் டார்ச்சர் தாங்காமல் தற்கொலைகள் தான் நடக்கும். இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி