செவிலிய உதவியாளர்: விண்ணப்ப விநியோகம் தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2015

செவிலிய உதவியாளர்: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

செவிலிய உதவியாளர் உள்ளிட்ட துணை மருத்துவப் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.செவிலிய உதவியாளர், ஆப்டோமெட்ரி பட்டயப்படிப்பு, மருத்துவப் பதிவேடு அறிவியல் பட்டயப் படிப்பு ஆகியப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.


தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை கிண்டி கிங் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றில் விண்ணப்பங்களைநேரில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ.250 ஆகும். தமிழக அரசின் www.tnhealth.org, www.tngov.in ஆகிய இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப விநியோகத்துக்கான கடைசித் தேதி அக்டோபர் 26-ஆம் தேதி ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அலுவலகத்துக்கு சென்று சேர வேண்டிய கடைசித் தேதி அக்டோபர் 27 ஆகும். நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இடங்கள் பூர்த்தி செய்யப்படும் என தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி