வீட்டுக்கடன், வாகன கடனுக்கான வட்டி குறைப்பு: இந்தியன் வங்கி பொதுமேலாளர் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2015

வீட்டுக்கடன், வாகன கடனுக்கான வட்டி குறைப்பு: இந்தியன் வங்கி பொதுமேலாளர் அறிவிப்பு

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி 0.5சதவீதம் குறைத்தது. இந்த ஆண்டு இதுவரை 1.25 சதவீதம் வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது.


ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை குறைத்ததை அடுத்து தனிநபர் கடன், வாகன கடன், வீட்டுக்கடன் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதங்களையும் குறைக்கவேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.இதையடுத்து வங்கிகள் வட்டி வீதங்களை குறைத்து வருகின்றன. இந்த நிலையில் திருவிழா காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வீட்டுக்கடன் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டியை குறைப்பதாகஇந்தியன் வங்கி அறிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வடக்கு மண்டல மேலாளர் மற்றும் பொதுமேலாளர் எம்.நாகராஜன் கூறியதாவது:-திருவிழா காலத்தை கொண்டாடும் வகையில் இந்தியன் வங்கி வீட்டுக்கடன் வட்டியை மிகவும் குறைவாக 9.65 சதவீதம் ஆகவும், வாகன கடன் வட்டியை 10 சதவீதம் ஆகவும் குறைத்துள்ளது.


மேலும் ரூ.75 லட்சம் வரையிலான வீட்டு கடன்களுக்கு பரிசீலனை கட்டணம் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.வாகன கடன்களுக்கு பரிசீலனை கட்டணம் 50 சதவீதம் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வாய்ப்பை பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி