கேள்வித்தாள் வெளியானதால் ஆசிரியர் தேர்வு ரத்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2015

கேள்வித்தாள் வெளியானதால் ஆசிரியர் தேர்வு ரத்து

மத்திய அரசால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில், பிரைமரி ஆசிரியர்கள் (பி.ஆர்.டி.), பிரைமரி ஆசிரியர்கள் (இசை) ஆகிய பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக நேற்று எழுத்து தேர்வு நடைபெறுவதாக இருந்தது.


இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த தேர்வின் கேள்வித்தாள் ரகசியமாக வெளியானது. கேள்வித்தாளை ரகசியமாக படம் பிடித்து, ‘வாட்ஸ் அப்’பில் வெளியிட்டதாக, அரியானா மாநிலம் ரெவாரி நகரில் 13 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அந்த கும்பலிடம் இருந்து கேள்வித்தாள்கள்பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, நேற்று நடக்க இருந்த ஆசிரியர் தேர்வை கேந்திரிய வித்யாலயா ரத்து செய்தது.


இதுகுறித்து கேந்திரிய வித்யாலயா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-பி.ஆர்.டி. தேர்வு கேள்வித்தாள் வெளியாகி விட்டதாக சனிக்கிழமை மாலை எங்களுக்கு தகவல் கிடைத்தது. அது உண்மையான கேள்வித்தாள் தானா என்று உடனடியாக சரிபார்க்க இயலாது என்று எங்கள் சார்பில் தேர்வை நடத்தும் அமைப்பு தெரிவித்தது. எனவே, தேர்வை ரத்து செய்து விட்டு, கேள்வித்தாளை சரிபார்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ரத்து செய்யப்பட்ட இரு தேர்வுகளும், எப்போது நடக்கும் என்று அறிவிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி