ஆசிரியர், அரசு ஊழியர் வாக்கு யாருக்குஆசிரியர் சங்கம் சூசகம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2015

ஆசிரியர், அரசு ஊழியர் வாக்கு யாருக்குஆசிரியர் சங்கம் சூசகம்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின், மாநில செயற்குழு கூட்டம்,கடலுார் மாவட்டம், பிச்சாவரத்தில் நேற்று நடந்தது. சங்க பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம், நிருபர்களிடம் கூறியதாவது:சட்டசபை தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், தமிழக முதல்வர் காலம் கடத்தி வருகிறார்.


இதனால் ஏமாற்றம் அடையப்போவது நாங்கள் அல்ல.தமிழகத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் என, 20 லட்சம் பேர் உள்ளோம். குடும்பத்திற்கு, ஐந்து பேர் என்றால் கூட, ஒரு கோடி ஓட்டுகள் எங்கு போகும் என, நான் சொல்ல வேண்டியதில்லை.இந்த அரசு பொறுப்பேற்றகாலத்தில் இருந்து, 2 ஆண்டுகள் அமைதியாக இருந்தோம். எந்த அறிவிப்பும் வராததால்தான் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.


தமிழகத்தில் புதிதாக தனியார் பள்ளி துவங்க நகர்புறத்தில் 20 செண்ட், கிராம புறத்தில் 3 ஏக்கர் பரப்பில் இடம் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், கீற்று கொட்டகை இருந்தால் தனியார் பள்ளி துவங்க அரசு அனுமதி அளித்து வருவது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. டாக்டர்களுக்கு இருப்பதுபோல், 'ஆசிரியர்களுக்கு உயிர் பாதுகாப்பு சட்டம்' உள்ளிட்ட எங்களின் நியாயமான 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 8ம் தேதி, ஒரு நாள் அடையாள வேலைநிறுத்ததில் 3.5 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.


அதன் பின்னரும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், இம்மாத இறுதி அல்லது நவம்பர் மாதத்தில், தொடக்கப் பள்ளியில் இருந்து, பிளஸ் 2 வரை, அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்த, மாநில அளவில் ஆலோசனை நடத்தி முடிவை அறிவிப்போம்.இவ்வாறு, மீனாட்சிசுந்தரம் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி