யு.ஜி.சி., விதியை மீறி ஆன்லைன் படிப்பு அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2015

யு.ஜி.சி., விதியை மீறி ஆன்லைன் படிப்பு அறிவிப்பு!

ஆன்லைன் படிப்புக்கு அனுமதியில்லை என, மத்திய பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., எச்சரித்த நிலையில், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, ஆன்லைன் வகுப்பு நடத்தப்படும் என, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., அறிவித்துள்ளது.


இந்தியாவில் பல பல்கலைகள், ஆன்லைன் மூலம் டிப்ளமோ, டிகிரி மற்றும் சான்றிதழ் படிப்புகள் நடத்தி வந்தன. அதில், மாணவர்களுக்கு சரியாக பாடம் கற்று தருவதில்லை என புகார் எழுந்ததால், ஆன்லைன் படிப்புக்கு, அனுமதி தரப்படவில்லை. மீறி நடத்தினால், நடவடிக்கை எடுக்கப்படும் என, யு.ஜி.சி., எச்சரித்தது. இதையடுத்து, அண்ணா பல்கலையில் அறிவிக்கப்பட்ட, எம்.எஸ்சி., படிப்பு நிறுத்தப்பட்டது. இதற்கிடையில், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, ஏழு வார சான்றிதழ் படிப்பு நடத்தப்படும் என, என்.சி.இ.ஆர்.டி., அறிவித்துள்ளது.


மொத்தம் ஐந்து பகுதிகள் கொண்ட ஏழு வார படிப்பில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மாவட்ட மையங்களில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் சேரலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர்,http:/www.ncert.nic.in/departments/nie/der/index.html என்ற இணைப்பில், 10க்குள் பதிவு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படுவோர் பட்டியல், 18ம் தேதி அறிவிக்கப்படும். ஆன்லைன் படிப்பில் சேர்வோர், இன்டர்நெட் இணைப்பு கொண்ட கணினி வைத்திருக்க வேண்டியதுஅவசியம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி