சிவில் சர்வீஸ் தேர்வில் சீர்திருத்தம்; பிப்ரவரியில் அறிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2015

சிவில் சர்வீஸ் தேர்வில் சீர்திருத்தம்; பிப்ரவரியில் அறிக்கை

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் சீர்திருத்தம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழு, அதன் பரிந்துரையை ஆறு மாதங்களில் வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., ஆண்டுதோறும் மூன்று கட்டங்களாக சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்துகிறது.


இதன்படி, முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம், ஐ.ஏ.எஸ்., - ஐ.எப்.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசு பணிகளுக்கு, அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். இத்தேர்வுகளை, தற்காலத்திற்கு ஏற்றவாறு நவீனமயமாக்குவது, தேர்வு நடைமுறையில் ஏற்படும் தேவையற்ற தாமதத்தை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள, யு.பி.எஸ்.சி., திட்டமிட்டுள்ளது. இதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை முன்னாள் செயலரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான பி.எஸ்.பஸ்வான் தலைமையில், ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, தற்போதுள்ள தேர்வு முறைகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆராயும்.


சிவில் சர்வீஸ் தேர்வுகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த பரிந்துரையை, இக்குழு, யு.பி.எஸ்.சி.,க்கு வழங்கும். அடுத்த ஆண்டு, பிப்ரவரிக்குள், அறிக்கை வழங்கப்பட்டு விடும். அதன் அடிப்படையில், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மாற்றங்கள் செய்யப்படும் என, யு.பி.எஸ்.சி., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி