பகிர்தலில் மனமகிழ்வு வாரவிழா! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2015

பகிர்தலில் மனமகிழ்வு வாரவிழா!

தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்துதல்

தேவகோட்டை -சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தீயினால் பாதிக்கப்பட்டதொட்டிய நாயக்கர் சமுதாய பகுதிக்கு சென்று பகிர்தலில் மனமகிழ்வு வார விழா கொண்டாடினர்.


தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிசார்பில்பகிர்தலில் மனமகிழ்வு வாரவிழா கொண்டாடப்பட்டது. தமிழக அரசின் சார்பில்பள்ளிகளில் பகிர்தலில் மனமகிழ்வு வார விழா கொண்டாட உத்தரவிடப்பட்டது.அதன்அடிப்படையில் தேவகோட்டை தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் வாழும் பகுதியில்எதிர்பாராத விதமாக நடந்த தீ விபத்து சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குஉதவி செய்யும் நோக்கிலும், இழந்ததை எண்ணி வருத்தப்படாமல் இருக்கும்விதமாகவும் தொட்டிய நாயக்கர் சமுதயாம் வாழும் பகுதியில் இந்நிகழ்வைநடத்தினார்கள்.

விழாவின் தொடக்கமாக ஆசிரியர் சோமசுந்தரம்வரவேற்றார்.பள்ளித் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.தொட்டியநாயக்கர் சமுதாய தலைவர்கள் பாண்டியன்,முருகன் ,குமார் முன்னிலைவகித்தனர்.பள்ளி மாணவ,மாணவியர் சண்முகம் ,ஈஸ்வரன்,பிரவீனா,தனலெட்சுமி,ஜெகதீஸ்வரன் ,ஜீவா,பரத்குமார் ஆகியோர் சுனாமியில் இருந்து மீண்டுவருவது போன்ற விழிப்புணர்வு நாடகம் நடித்து காண்பித்தனர்.தன்னம்பிக்கை தருவதுபோன்று மாணவிகள் பானை வைத்து நடனம் ஆடினார்கள்.இப் பள்ளியில் பயிலும்தொட்டிய நாயக்கர் சமுதாய பகுதியை சார்ந்த மாணவர்கள்வாசுகி,முத்தழகி,ரஞ்சித்,வசந்தகுமார் ஆகியோரும் நடித்துகாண்பித்தனர்.அடுத்தவர்களுக்கு ஆபத்து காலத்தில் ஆதரவு தந்து உதவுவதுகுறித்தும்,இயற்கையின் சீற்றத்தால் மக்களுக்கு ஏற்படும் துயரத்தையும்,அந்ததுயரத்தில் இருந்து எவ்வாறு மீள்வது என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துக்கூறப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்து மீனாள் செய்துஇருந்தார்.இப் பள்ளி மாணவ,மாணவியரால் இச்சமுதாய குழந்தைகளுக்கு ரொட்டிபாக்கெட் வழங்கப்பட்டது.விழாவின் நிறைவாக ஆசிரியை செல்வ மீனாள் நன்றிகூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி