மத்திய அரசின் சிறந்த மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி,
வருகிற 15-ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள், குடும்பச் சூழ்நிலைக் காரணமாக உயர் கல்வியில் சேர முடியாமல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்த கல்வி உதவித் தொகைத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பிளஸ்-2 தேர்வில் 80 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ள, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சத்துக்கும் குறைவாக உள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஆண்டுக்கு 82 ஆயிரம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.கலை, அறிவியல் இளநிலை பட்டப் படிப்பை மேற்கொள்பவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 1,000 கல்வி உதவித் தொகையும், முதுநிலை கலை அறிவியல் பட்டப் படிப்பின்போது மாதம் ரூ. 2,000 உதவித் தொகையும் வழங்கப்படும்.இளநிலை பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்பில் சேர்ந்துள்ளவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித் தொகையும், அடுத்து வரும் ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 2,000 உதவித் தொகையும் வழங்கப்படும்.
2015-ஆம் ஆண்டுக்கான இந்த உதவித் தொகைத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், மாணவர்கள்நலன் கருதி இந்த கால அவகாசத்தை அக்டோபர் 15-ஆம் தேதி வரை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நீட்டித்துள்ளது. மேலும் விவரங்களை www.sholarships.gov.inlogin.do. என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி