கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் தொடர் போராட்டம்: சத்துணவு ஊழியர்கள் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2015

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் தொடர் போராட்டம்: சத்துணவு ஊழியர்கள் அறிவிப்பு

சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சத்துணவு ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.


தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 13-ஆவது வட்டக்கிளை மாநாடு அவிநாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.மாநாட்டுக்கு, சங்க வட்டக் கிளைத் தலைவர் ஆர்.நாகராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் கே.சுப்பிரமணியன், சுமதி, துணைச் செயலாளர் என்.சுசீலா, நெடுஞ்சாலைத் துறை திருப்பூர் கோட்டத் தலைவர் ஆர்.ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் கே.பி.பழனிசாமி, மாவட்டச் செயலாளர்கள் கே.பால்ராஜ், எம்.கே.பழனிசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இதையடுத்து, மாநிலத் தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது:சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. இதையடுத்து, கடந்த ஏப்ரல் 15 முதல் 20-ஆம் தேதி வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது, அரசு சார்பில் அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிறைவேற்றவில்லை.டிசம்பர் 22-ஆம் தேதி முதல்வரிடம் மனு அளிக்கவுள்ளோம். அதற்குப் பிறகும் முடிவெடுக்கவில்லை எனில் ஜனவரி 19-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார்.


புதிய நிர்வாகிகளாக வட்டக் கிளைத் தலைவர் கே.ஆர்.நாகராஜ், துணைத் தலைவர் கே.சுப்பரமணியம், செயலாளர் என்.சுசீலா, துணைச் செயலாளர் வி.சுமதி, பொருளாளர் என்.சாந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரிதா நன்றி கூறினார். இதில், 300-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி