திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு மனுவை பரிசீலிக்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2015

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு மனுவை பரிசீலிக்க உத்தரவு

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு கேட்ட மனுவைபரிசீலிக்க வேண்டும் டி.என்.பி.எஸ்.சி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவுதிறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு கேட்டு வழங்கப்பட்ட மனுவை 6 வாரத்துக்குள் பரிசீலிக்கவேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், வெங்கடேசன் உள்பட 4 பேர் ஒரு மனுவை தாக்கல் செய்தார்கள். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–


பட்டப்படிப்பு


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.யில்.) 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். நாங்கள் 10–ம் வகுப்பு கல்வி தகுதி அடிப்படையில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தோம். கடந்த 1996–ம் ஆண்டு தமிழக அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், ‘எங்களுக்கு தலைமை செயலகம் ஊழியர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்டவைகள் வழங்கப்படும் என்றும்,அதற்காக 5 ஆண்டுக்குள் ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இதனால், நாங்கள் திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றோம்.

பட்டம் செல்லும்


இந்த நிலையில், தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை செயலாளர் கடந்த 2009–ம் ஆண்டு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், 10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு அதன்பின்னர் பட்டப்படிப்பு படித்த இளநிலை பட்டப்படிப்பு மட்டுமே செல்லும் என்று கூறியுள்ளார். ஆனால், 12–ம் வகுப்பு படிக்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவின்படி எங்களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளரிடம் மனு கொடுத்தோம். இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறியிருந்தனர்.


பரிசீலிக்கவேண்டும்


இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சத்தியநாராயணன், மனுதாரர்களின் கோரிக்கை மனுவை தகுதி அடிப்படையில் பரிசீலித்து, தகுந்த உத்தரவை 6 வாரத்துக்குள் பிறப்பிக்கவேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.tamilna

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி