ஆசிரியர்கள் நாளை 'ஸ்டிரைக்'; பள்ளிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு-DINAMALAR News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2015

ஆசிரியர்கள் நாளை 'ஸ்டிரைக்'; பள்ளிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு-DINAMALAR News

அரசுடன் நடத்திய பேச்சு தோல்வியடைந்ததால், 'திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்த போராட்டம் நடக்கும்' என, ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால், பள்ளிகளுக்கு, ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.


கடந்த, 2003ல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ - ஜியோ' என்ற அமைப்பை துவக்கி, போராட்டம் நடத்தி, அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினர். தற்போது, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ' போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளது.நாளை, மாநிலம் முழுவதும், மூன்று லட்சம் ஆசிரியர்கள், ஒரு லட்சம் பள்ளிகளுக்கு பூட்டுப் போட்டு, வேலைநிறுத்தம் செய்ய முடிவுசெய்தனர். அதனால், ஜாக்டோ உயர்மட்ட நிர்வாகிகளை அழைத்து, அரசு நேற்று பேச்சு நடத்தியது.பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்கள் கண்ணப்பன், இளங்கோவன், இணை இயக்குனர்கள் பழனிச்சாமி, கருப்பசாமி ஆகியோர், அரசு சார்பில் பேச்சு நடத்தினர்.சங்க நிர்வாகிகளுக்கு, சூடான கட்லெட், காரச்சேவு, கேக் மற்றும் காபி வழங்கப்பட்டு பேச்சு துவங்கியது. இரண்டு மணிநேர பேச்சில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால், 'திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடக்கும்' என, ஜாக்டோ நிர்வாகிகள் அறிவித்தனர்.பேச்சு நடத்த போது உளவுத்துறை போலீஸ் அதிகாரிகள், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள், அதிகாரிகளிடம் ஆலோசனைநடத்தினர். பின், ஆசிரியர்கள் போராட்டத்தின் போது, அனைத்து பள்ளிகளுக்கும் ஆயுதப்படை மற்றும் சிறப்புப் படை போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்த முடிவு செய்ததாக, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழக ஆரம்பப் பள்ளிஆசிரியர் சங்கம் மற்றும் கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் ஆகியவை, 'நாளை நடக்க உள்ள வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை' என, அறிவித்துள்ளன.

22 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Tet case Rana achi eannaiku hearing varuthu anyone pls tell frnds

    ReplyDelete
  3. Any possible for PG second list?

    ReplyDelete
  4. 2010cv case judgment eppothan varuthu.anybody know please reply me.

    ReplyDelete
  5. 2010cv case judgment eppothan varuthu.anybody know please reply me.

    ReplyDelete
  6. நண்பர்களுக்கு வணக்கம்,

    ஆசிரியர் தகுதி தேர்வு மீண்டும் வராது..
    உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கும் வராது...
    எந்த பணி நியமனமும் நடைபெறாது...
    முதுகலை ஆசிரியர் பணி நியமனமும் நடைபெறாது...
    2010 CV கேஸ் முடிவு வராது...
    30% ஆதி திராவிடர் பள்ளி வழக்கும் முடிவுக்கு வராது...

    எனவே நண்பர்களே நீங்கள் இந்த கல்வி வலைத்தளத்தில் புலம்புவதை விட்டு விட்டு வேறு வேலைகளில் கவனம் செலுத்த வேண்டுகிறேன்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வராது... வராது... நடைபெறாது... நடைபெறாது... வராது... வராது... அப்படினா....................இந்த அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வராது... வரவே வேண்டாம்.

      Delete
    2. ஓட்டு கேட்டு எவனாவது வந்தான்

      Delete
    3. UNKNOWN UNKNOWN (எனக்கு எதுவும் தெரியாது எனக்கு எதுவும் தெரியாது)

      Delete
    4. Yes sir..admk Ku vote pana venam..90ku mela edutha engaluku jop podala..wash out panrom admk va..k frds.

      Delete
  7. Tet Case Patri ninaippadhai viduthu veru thuraigalil pani pera muyarchippadhu sirandhadhu.....

    ReplyDelete
  8. Wat abt lab assistant result. ...? When it will be published. ...?pls tell me. ... any information. Abt lab assistant .............

    ReplyDelete
  9. dear 2013 tet friends ithuvarai padhikkapattavargal 20kkum metpattor caseil join panna viruppam therivithu ullanar, viruppam ullavargal innum irandu natkalukkul thangalin name, mobile number, district name ( anbutet2013@gmail.com ) mail idkku anuppumaru ketkirom, advacate innum irandu naalil appointment koduviduvaar yenave kala thaamathamvendam.... ungal nanmaikke, ungalin urimai ungal choice...

    ReplyDelete
  10. RMSA 10 days training. any one attend the training give some information

    ReplyDelete
  11. நண்பர்கள் யாராவது RMSA training போய் இருந்தால் உங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  12. Admk .next election loss. Tet court case. .relaxation yaru ketu thanthu
    . Above 90 edutha engaluku jop podama. All frds pls votes for dmk..and etc..yaruku venam vote panuga admk vote panathiga pls..

    ReplyDelete
  13. Nan apave escape! Tet mark 99ku 1m kidaikala, Adhe time gr4la poiten, idhan life! Govt.a nambathinga sir!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி