அரசு கலை கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைரூ.100 கோடியில்திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2015

அரசு கலை கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைரூ.100 கோடியில்திட்டம்

தமிழக அளவில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் ரூ.100 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான விபரங்களை கல்லுாரி கல்வி இயக்குனரகம் சேகரித்து வருகிறது.மாநில அளவில் 72 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் இயங்குகின்றன.


இதில், 10 கல்லுாரிகளுக்கு மேல் 'கிரேடு'- 1 அந்தஸ்து பெற்றுள்ளன. நடப்பு ஆண்டு பெரும்பாலான கல்லுாரிகளில் புதிய பாடப்பிரிவுகளை துவக்க அரசுஅனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே சில கல்லுாரிகளில் போதிய வகுப்பறைகள் இன்றிமரத்தடியில் வகுப்புகள் நடப்பதாகவும், ஆய்வகம், நாற்காலி, மேஜை உள்ளிட்ட வசதியில்லை என புகார் எழுந்தது.ரூ.100 கோடி திட்டம்: இந்நிலையில், அனைத்து மாவட்டத்திலும் உள்ள அரசு கல்லுாரிகளில் கூடுதல் வகுப்பறை வசதிகளைஏற்படுத்த அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது.


இதற்கான கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் தேவை குறித்த பட்டியலை வழங்க, கல்லுாரிகளுக்கு கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.அரசு கல்லுாரி அலுவலர் ஒருவர் கூறுகையில்,“ கல்லுாரிகளில் கூடுதல் வகுப்பறை,சேர்,மேஜை, அறிவியல் ஆய்வக உபகரணங்கள் தேவை குறித்த அறிக்கை தர அரசு கேட்டதால், சேகரித்து அனுப்பி வருகிறோம். விரைவில் அரசு கல்லுாரிகளில்கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

1 comment:

  1. 2013 தமிழ் நாடு தகுதி தேர்வு தேர்ச்சி ( 60 % ) பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு

    வருகின்ற 16 .11.2015 திங்கள் கிழமை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு உண்ணாவிரதம் மேற்கொள்ளபடுகிறது

    அற வழியில் நாம் பாதிக்க பட்டதை தமிழக முதல்வரின் மேலான கவனத்திற்கு எடுத்து செல்வோம்

    முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது . அனுமதி கடிதம் 15.11.2015 மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் .

    அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .

    கலந்து கொள்ளும் அனைவரும் கீழ்க்கண்ட அலைபேசி எண்களுக்கு தங்கள் பெயர் ,ஊர் ,பாடம், மதிப்பெண் , குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை ஆகிய தகவல்களை குறுந்தகவல் மூலம் பகிர்ந்து , பதிவு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் . கூட்டம் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:

    திருமதி பாரதி : 94426 91704
    திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
    திரு.பரந்தாமன் : 94432 64239
    திரு.சக்தி : 97512 68580
    திரு.லெனின் ராஜ் : 80125 32233

    இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி