10ம் வகுப்பு பொது தேர்வு செய்முறை தேர்வு உண்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2015

10ம் வகுப்பு பொது தேர்வு செய்முறை தேர்வு உண்டு

'பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வில், அறிவியல் பாட செய்முறைத் தேர்வு, கண்டிப்பாக உண்டு' என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.சில ஆண்டுகளாக, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், பிளஸ் 2 மாணவர்களுக்கு நடத்தப்படுவது போல், அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது.


இதற்கு, 25 மதிப்பெண்கள் தனியாக வழங்கப்படுகின்றன. இத்தேர்வுக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு தலா, நான்கு செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படும். பின், அவற்றில், தலா ஒரு பயிற்சி, செய்முறைத் தேர்வில் வினாவாக வரும்.இதற்காக, செய்முறைத் தேர்வு பயிற்சி புத்தகம், கல்வித் துறையிலிருந்து வழங்கப்படும். இந்த ஆண்டு, பயிற்சிப் புத்தகம் வழங்கப்படாததால், செய்முறைத் தேர்வு உண்டா என, மாணவர்கள் குழப்பம்அடைந்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில், நவ., 28ல் செய்தி வெளியானது.


இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை கண்ணப்பன் கூறியதாவது:


செய்முறைத் தேர்வுக்கான பயிற்சி வினாக்கள், அறிவியல் பாடப் புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளன; இந்த ஆண்டு தனியாக புத்தகம் வழங்கப்படாது. அதிலுள்ள, 15 செய்முறைப் பயிற்சிகள் குறித்து, ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும். பொதுத் தேர்வுக்கு கட்டாயம் செய்முறைத் தேர்வு உண்டு; எந்த மாற்றமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி