மெல்லக் கற்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வினா-விடைகையேடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2015

மெல்லக் கற்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வினா-விடைகையேடு

விருதுநகர் மாவட்டத்தில் 10, பிளஸ்-2 படிக்கும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு வினா-விடை கையேடு தயாரிக்கப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புதன்கிழமை தெரிவித்தார்.இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி கூறியதாவது:


விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டில் 10, பிளஸ்-2 காலாண்டுத் தேர்வில்தேர்ச்சி பெறாத மெல்லக் கற்கும் மாணவர்களுக்காக சிறப்பு கையேடு பாடவாரியாகதயாரிக்கப்பட்டுள்ளது.பிளஸ்-2 மாணவர்களுக்காக தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரி-தாவரவியல், உயிரி-விலங்கியல், வரலாறு, பொருளியல், கணக்குப்பதிவியல்,வணிகவியல் ஆகிய 11 பாடங்களுக்குரிய வினா-விடை கையேடு தயாரித்து முடிக்கப்பட்டு இப்போது w‌w‌w.c‌h‌i‌e‌f‌e‌d‌u​c​a‌t‌i‌o‌n​a‌l‌o‌f‌f‌i​c‌e‌r.‌i‌n என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.தேவைப்படும் பள்ளி மாணவர்களுக்கு அந்தந்த ஆசிரியர்கள் குறிப்பிட்ட பாடத்திற்குரிய வினா-விடை கையேட்டை பதிவிறக்கம் செய்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி