மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கெனவே 6 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது மேலும் 2 வேலை நாள்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு சனிக்கிழமைகளையும் சேர்த்தால் 10 நாள்கள் இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடுமுறை காரணமாக, பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 போன்ற பொதுத்தேர்வு மாணவர்கள் உள்பட பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.இது தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:-வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இந்த மாவட்டங்களில் மட்டுமே பள்ளிகள் செயல்படவில்லை. பிற மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.இந்த நிலையில், மழை நின்ற பிறகும் பள்ளி, கல்லூரி வளாகங்கள் ஈரப்பதத்துடன் இருப்பதாலும், வெள்ள நீர் பல பகுதிகளில் முழுமையாக வடியாததாலும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டபிறகுதான், இழந்த வேலை நாள்களை எவ்வாறு ஈடு செய்வது என்பது குறித்து பரிசீலிக்கப்படும். இப்போது மாணவர்களின் பாதுகாப்பு கருதியே இந்தவிடுமுறை அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.
சென்னை உள்பட 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 22-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. மழை நின்ற பிறகும் பலஇடங்களில் வெள்ள நீர் வடியாததால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3மாவட்டங்களில் வரும் 22-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறையை அறிவித்துள்ளனர்.
மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கெனவே 6 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது மேலும் 2 வேலை நாள்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு சனிக்கிழமைகளையும் சேர்த்தால் 10 நாள்கள் இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடுமுறை காரணமாக, பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 போன்ற பொதுத்தேர்வு மாணவர்கள் உள்பட பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.இது தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:-வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இந்த மாவட்டங்களில் மட்டுமே பள்ளிகள் செயல்படவில்லை. பிற மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.இந்த நிலையில், மழை நின்ற பிறகும் பள்ளி, கல்லூரி வளாகங்கள் ஈரப்பதத்துடன் இருப்பதாலும், வெள்ள நீர் பல பகுதிகளில் முழுமையாக வடியாததாலும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டபிறகுதான், இழந்த வேலை நாள்களை எவ்வாறு ஈடு செய்வது என்பது குறித்து பரிசீலிக்கப்படும். இப்போது மாணவர்களின் பாதுகாப்பு கருதியே இந்தவிடுமுறை அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.
மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கெனவே 6 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது மேலும் 2 வேலை நாள்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு சனிக்கிழமைகளையும் சேர்த்தால் 10 நாள்கள் இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடுமுறை காரணமாக, பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 போன்ற பொதுத்தேர்வு மாணவர்கள் உள்பட பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.இது தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:-வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இந்த மாவட்டங்களில் மட்டுமே பள்ளிகள் செயல்படவில்லை. பிற மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.இந்த நிலையில், மழை நின்ற பிறகும் பள்ளி, கல்லூரி வளாகங்கள் ஈரப்பதத்துடன் இருப்பதாலும், வெள்ள நீர் பல பகுதிகளில் முழுமையாக வடியாததாலும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டபிறகுதான், இழந்த வேலை நாள்களை எவ்வாறு ஈடு செய்வது என்பது குறித்து பரிசீலிக்கப்படும். இப்போது மாணவர்களின் பாதுகாப்பு கருதியே இந்தவிடுமுறை அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி