சிறப்பு பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை பரிதாப நிலையில்மாற்றுத்திறனாளிகள் கல்வித்தரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2015

சிறப்பு பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை பரிதாப நிலையில்மாற்றுத்திறனாளிகள் கல்வித்தரம்

மாற்றுத்திறனாளிகளுக்கான, 23 சிறப்புப்பள்ளிகளில், 16 பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லை. அதனால், அவர்களது, கல்வித்தரம், நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கென, 23 அரசு சிறப்பு பள்ளிகள் உள்ளன. இவற்றில், பார்வையற்றோருக்கான பள்ளி 10, காதுகேளாதோருக்கான பள்ளி 11, கை, கால் ஊனமுற்றோர் மற்றும் மூளைவளர்ச்சி குன்றியோருக்கு தலா, ஒரு பள்ளி அமைந்துள்ளன.


இதில், 16 பள்ளிகளில், தலைமையாசிரியர் பணியிடம், பல ஆண்டாக நிரப்பப்படாமல் உள்ளது. அத்துடன், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின்,60 சதவீத பணியிடம், காலியாகவே உள்ளன.வேதனைசிறப்பு பள்ளிகள் நிர்வாகத்தை கவனிக்க வேண்டிய, சிறப்பு பள்ளிகளின் இணை இயக்குனர் பதவியும், பல ஆண்டாக, காலியாக இருப்பதுவேதனையான விஷயம். அந்த இடத்தில், சிறப்பு பயிற்சி முடித்தவரை நியமிக்க வேண்டியதற்கு பதிலாக, தற்போது, கிருஷ்ணகிரி மாவட்ட மறுவாழ்வு அலுவலர் மணிமாறன், தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.


கேள்விக்குறி


பார்வையற்றோருக்கு, 'பிரைலி' புத்தகம் மூலம், கல்வி போதித்தல், காது கேளாதோருக்கு, சைகை மூலம், பாடம் கற்பித்தல் போன்று மாற்றுத்திறனாளிகள் கல்வி பயிலும் வழிமுறை, மணிமாறனுக்கு, தெரியாது என்பதால், அவருக்கு, சிறப்பு பள்ளிகளை கண்காணிப்பது கேள்விக்குறியாக உள்ளது.சிறப்பு பள்ளிகளில், மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை, அதிகரிக்கும் நிலையில், அவர்களதுகல்வித்தரம் குறைந்து வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி