7–வது ஊதியக்குழு பரிந்துரையை கண்டித்து ரெயில்வே ஊழியர்கள் கருப்பு தின போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2015

7–வது ஊதியக்குழு பரிந்துரையை கண்டித்து ரெயில்வே ஊழியர்கள் கருப்பு தின போராட்டம்

ரெயில்வே தொழிற் சங்கங்கள் இன்றைய தினத்தை கருப்பு தினமாக அறிவித்து ரெயில்வே அலுவலகங்கள், தொழிற்சாலைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.7–வது ஊதியக்குழு பரிந்துரையில் குறைந்தபட்சம் ஊதியம் ரூ.26 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அலவன்ஸ் குறைப்பு, வீட்டு வாடகை அலவன்ஸ் 24 சதவீதமாக குறைப்பு உள்பட 52 அலவன்ஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்திலும் தொழிலாளர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்க நிர்வாக பொதுச் செயலாளர் எம்.சூரிய பிரகாஷ் தலைமையில் பெரம்பூர் லோகோ கேட் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கேரேஜ் பணிமனை முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.எஸ்.ஆர்.இ.எஸ். பொதுச்செயலாளர் பி.எஸ்.சூரியபிரகாசம், டி.ஆர்.இ.யூ. பொதுச்செயலாளர் ஜானகி ராமன், நிர்வாகிகள் சந்திரசேகர், பார்த்திபன் உள்ளிட்ட தொழிலாளர்கள் 300–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினரும் இன்று மாலை ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி