தபால்காரர், மெயில்கார்டு பணிக்கான தேர்வு:இணையதளத்தில் அனுமதிச்சீட்டு வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2015

தபால்காரர், மெயில்கார்டு பணிக்கான தேர்வு:இணையதளத்தில் அனுமதிச்சீட்டு வெளியீடு

First Published :12 November 2015 08:37 AM ISTதபால்காரர் (போஸ்ட்மென்), மெயில் கார்டு தேர்வுக்கான அனுமதிச் சீட்டைபதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக அஞ்சல் வட்டம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அஞ்சல் வட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:


தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் உள்ள அஞ்சலக கோட்டம்,அஞ்சலக பிரிப்பக கோட்டங்களில் காலியாக உள்ள 143 தபால்காரர் பணியிடத்துக்கும், ஒரு மெயில் கார்டு பணியிடத்துக்கும் எழுத்துத் தேர்வு வாயிலாக ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


இதற்கான தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ 15) நடைபெறவுள்ளது. காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வுக்குத் தகுதியான நபர்களுக்கான அனுமதிச்சீட்டு ஜ்ஜ்ஜ்.க்ர்ல்ஸ்ரீட்ங்ய்ய்ஹண்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இணையதளத்தில் இருந்து தங்களின் அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அஞ்சல் வாயிலாக அனுமதிச் சீட்டு அனுப்பப்படாது.அனுமதிச் சீட்டில் தேர்வு மையம், நேரம் உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்றும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி