தீப் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2015

தீப் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

தீபாவளிப் பண்டிகையையொட்டி, தீப் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்விஇயக்ககம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்விஅலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் அண்மையில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:-


தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும்போது சில இடங்களில் கவனக் குறைவாகபட்டாசு வெடிப்பதால் தீ விபத்து ஏற்பட்டு சேதங்கள் ஏற்படுகின்றன.சிறுவர்களுக்கு தீக்காயங்களும், சில நேரங்களில் பார்வை இழப்பும் ஏற்படுகின்றன.எனவே, இதனைத் தடுக்க சிறியவர்களும், பெரியவர்களும் கவனமாக பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்றும்,விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் மாணவர்களுக்கு செயல்விளக்கம் செய்ய வேண்டும் என்றும் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை அறிவுறுத்தியுள்ளது.


பட்டாசுகளை கையில் வைத்துக்கொண்டோ, உடலுக்கு அருகில் வைத்துக்கொண்டோ வெடிக்க வேண்டாம், ராக்கெட்டுகளை வெட்ட வெளியில் குடிசைகள் இல்லாத பகுதியில் மட்டுமே செலுத்த வேண்டும், பாட்டில்களில் பட்டாசுகளை வெடிக்கச் செய்யக் கூடாது உள்ளிட்ட அறிவுரைகளையும் அந்தத் துறை வழங்கியுள்ளது.தீப் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்பான முறையில் தீபாவளியைக் கொண்டாட அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி