மாணவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை கிடைப்பது உறுதி:இம்மாதத்துக்குள் வழங்க கல்வித்துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2015

மாணவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை கிடைப்பது உறுதி:இம்மாதத்துக்குள் வழங்க கல்வித்துறை அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், இம்மாத இறுதிக்குள் ஆதார் அடையாள அட்டை வழங்கப்படும் என்ற கல்வித்துறையின் அறிவிப்பால், பள்ளி நிர்வாகத்தினர் நிம்மதியடைந்துள்ளனர்.அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கும், விவரங்களை பதிவு செய்வது உள்ளிட்ட அனைத்துக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.


இதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்ட பள்ளிகளிலும், ஆதார் எண்கள் சமர்ப்பிக்க மாணவர்களுக்கு தீவிரமாக அறிவுறுத்தப்பட்டது. பலமுறை ஆதார் எண் இல்லாத மாணவர்கள் பெயர் பட்டியல் மட்டுமே கேட்கப்பட்டதே தவிர, ஆதார் அடையாள அட்டை இல்லாத மாணவர்களுக்கு கல்வித்துறையின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.உதவித்தொகைபெறும் மாணவர்களுக்கு ஆதார் எண் அவசியத் தேவையாக இருப்பதால், கல்வித்துறையின் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்த கோரிக்கை விடப்பட்டது.சிறப்பு முகாம்கள்:இதன் அடிப்படையில், பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என கல்வித்துறை அறிவித்து; தற்போது, அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகளின் முன்னிலையில் மாணவர்களுக்கு ஆதார் எண் வழங்குவதற்கான சிறப்புக்கூட்டம் நடந்தது.


22 சிறப்பு குழுக்கள்:


அதில் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் மட்டுமே, ஒரு லட்சத்து 56ஆயிரம் மாணவர்களுக்கு தற்போது வரை ஆதார் எடுக்கப்படவில்லை. அதிலும், மெட்ரிக் பள்ளிகளில்தான் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆதார் எண் இல்லை. அதிக எண்ணிக்கையில் ஆதார் எண் இல்லாத பள்ளி மாணவர்களைக்கொண்ட மாவட்டங்களில் இம்மாவட்டமும் முதன்மையாக உள்ளது.


ஆதார் அட்டை வழங்குவதற்கு, 22 சிறப்பு குழுக்கள் செயல்படுகின்றன. இதில் பெரும்பான்மையான குழுக்களை பள்ளிகளுக்கு பயன்படுத்தி, ஆதார் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்; இம்மாத இறுதிக்குள் ஆதார் அட்டை இல்லாத மாணவர்களுக்கு அட்டை வழங்கப்படும்.பள்ளி நிர்வாகத்தினரும் இந்நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தீவிரமாக ஈடுபட வேண்டும். இவ்வாறு கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி