பி.எட்., கல்லூரிகளில் போலி முதல்வர்கள்?ஆசிரியர் கல்வியியல் பல்கலை அதிர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2015

பி.எட்., கல்லூரிகளில் போலி முதல்வர்கள்?ஆசிரியர் கல்வியியல் பல்கலை அதிர்ச்சி

தமிழகத்தில் செயல்படும், பல பி.எட்., கல்லுாரிகளில் முதல்வர்களே இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர்கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், 21 பி.எட்., கல்லுாரிகளும், 600 சுயநிதி கல்லுாரிகளும் செயல்படுகின்றன.


இந்தக் கல்லுாரிகள், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரி முதல்வர் நியமனங்களுக்கு அங்கீகாரம் பெற வேண்டும்.மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் உள்ளனரா என, ஆய்வு செய்த பின், இந்த அங்கீகாரம் வழங்கப்படும்.ஏற்கனவே அங்கீகாரம் வழங்கி, மூன்று ஆண்டுகளாகி விட்டதால், இந்த கல்வி ஆண்டில் புதிதாகஅங்கீகாரம் தர வேண்டும். கல்லுாரிகள் இதற்கான ஆவணங்கள் மற்றும் விவரங்களை நவ., 6க்குள் தாக்கல் செய்ய, ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது. மேலும், கல்லுாரி முதல்வர் குறித்த விவரங்களை அனுப்பவும் அறிவுறுத்தியுள்ளது.ஆனால், பல கல்லுாரிகளில் முதல்வர் இல்லாமல், பிறமாவட்டங்கள் அல்லது மாநிலங்கள் அல்லது வேறு இடங்களில் பணிபுரியும் பிஎச்.டி.,முடித்தவர்களை, முதல்வர் போல கணக்கு காட்டியுள்ளதாக, ஆசிரியர் பல்கலைக்கு தெரிய வந்துள்ளது.


பல்கலை பதிவாளர் கலைச்செல்வன் நடத்திய ஆய்விலும், இது உறுதியாகிஉள்ளது. எனவே, அனைத்து கல்லுாரிகளும் தங்கள் முதல்வர்களை, ஒரே நேரத்தில் நேரில் ஆஜர்படுத்த, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அதிகாரிகள் வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளனர். இந்த நெருக்கடியை சமாளிக்க, உயர்கல்விதுறை அதிகாரிகளைப் பிடித்து, அங்கீகாரம் பெற சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் முடிவு செய்துள்ளன.

6 comments:

  1. முதல்வர்கள் மட்டுமல்ல, பேராசிரியர்கள் கூட போலி தான்

    ReplyDelete
  2. அணைத்து தனியார் B.Ed.கல்லூரிகளையும் சோதனை seithaal 50% போலி பேராசிரியர்கள் பிடி படுவர்

    ReplyDelete
  3. Sir original lecturers and principal are not working many colleges so find all colleges sir

    ReplyDelete
  4. போலி பேராசிரியர்கள் என்பதை காட்டிலும் பேராசிரியர்கள் இல்லாமலேயே சில B.Ed கல்லூரிகள் இயங்கி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது . அரசும் கண்டு கொள்வதில்லை அரசு அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை . பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு தனியார் B.Ed. கல்லூரி 3 பேராசிரியர்கலை மட்டுமே கொண்டு நடத்தி வருகின்றது அந்த கல்லூரி நிர்வாகம். இதை போல் ஒவ்வொரு மாவட்டமும் சோதனை seithaal பல கல்லூரிகள் பேராசிரியர்கள் இல்லாமலேயே B. Ed படிப்பை நடத்தி வருவதும் அம்பலம் ஆகும் அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இது கூட சொல்லி தான் தெரியநுமா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி