மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக ஒரு சீருடை, பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதாவெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடை வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். அவரதுஅறிவிப்பை செயல்படுத்தும் பொருட்டு, தமிழகத்தில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த காரணத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாதவகையில் அவர்கள் தொடர்ந்து படிக்க ஏதுவாக விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், ஒரு சீருடை ஆகியவற்றை உடனடியாக வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.பாடப்புத்தங்கள், நோட்டுகள், சீருடை ஆகியவற்றை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம், சமூகநலத் துறை ஆகியவற்றிடமிருந்து பெற்று பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக வழங்க பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Nov 21, 2015
Home
kalviseithi
மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக சீருடை, புத்தகம், நோட்டு: பள்ளிக் கல்வி இயக்குநர்களுக்கு அரசு உத்தரவு
மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக சீருடை, புத்தகம், நோட்டு: பள்ளிக் கல்வி இயக்குநர்களுக்கு அரசு உத்தரவு
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி