தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2015

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் கோரிக்கை

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது என தீர்மானிக்கப்பட்டது.அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்க்கு முக்கியத்துவம் தந்து ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாய பாடமாக கொண்டுவர வேண்டும்.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய, மாணவர்களின் நலனுக்காகவும் அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கிலும் அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டும் "ஆரம்ப கல்வி முதல் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்பு வரை" கணினி அறிவியல் பாடத்தை கட்டாயக் பாடமாக கொண்டுவர வேண்டும்.


மெட்ரிக், CBSE பாடத்திட்டத்தில் ஆரம்ப கல்வியிலே கணினி அறிவியல் பாடம் உள்ளது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்கள் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் கல்வி கட்டாய பாடமாக உள்ளது. கேரளத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற கணிதம்,அறிவியல் போன்று கணினி அறிவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகம் தகவல் தொழில் நுட்பத்தில் இன்று பல புரட்சி செய்து வந்த போதிலும் கணினி கல்விக்கு முக்கியத்துவம் தராதது வேதனைக்குறியது.சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடத்தை நடப்பு கல்வி ஆண்டிலே நடைமுறைப்படுத்த வேண்டும்.(சமச்சீர் கல்வியில் காணமல் போன கணினி அறிவியல் பாடத்திட்டம்) தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசின் கல்வித்திட்டம் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் 2011 ஆம் கல்வியாண்டில் சமச்சீர் கல்வியில் 6 ,7,8,9,10 ஆகிய வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடம் அறிமுகப் படுத்தப்பட்டு புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மாணவர்கள், பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் மத்தியில் பெறும் வரவேற்ப்பை பெற்றது ஆனால் காரணம் ஏதுமின்றி அந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டது. சில மாதத்தில் கணினிஅறிவியல் பாடம் காரணமின்றி கைவிடப்பட்டது. தற்போது அனைத்து தனியார் பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடம் கட்டாயப்பாடமாக உள்ளது.கணினி அறிவியல் பாடப்பிரிவு இல்லாத தர உயர்ந்தப்பட்ட மேனிலைப்பள்ளிகள்.மேனிலைப்பள்ளிகள் (ம)தற்போது தரம் உயர்த்தப்படும் 800க்கும் மேற்பட்ட மேனிலைப்பள்ளிகளில் பல பள்ளியில் கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவு இல்லை . கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவை கொண்டு வரவேண்டும் .பல பள்ளிகளில் கணினி ஆசிரியர்களே இல்லை. உலகமே கணினிமயமாக மாறிக்கொண்டு வரும் காலகட்டத்தில் கணினியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு பள்ளியில் மாணவர்கள் அதிகம் கணினி அறிவியல் பாடத்தைத் தேர்வு செய்கின்றனர். மாணவர்களின் விகிதம் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.மத்திய அரசின் திட்டத்தின் கீழ்: புதிய கல்விக் கொள்கை மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை ஆரம்ப பள்ளி முதலே கட்டாயப்பாடமாக அறிவிக்கவேண்டும். இந்தியாவின் வாழும் கோடிக்கணக்காண கிராமப்புற ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்.


பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமனம் செய்யவேண்டும் தமிழக அரசு. கணினி இன்றியமையாத சூழலில் தொடக்க, நடுநிலை,உயர்நிலை பள்ளிக்கு குறைந்தது ஓர் கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்யவேண்டும்.21000க்கும் மேற்பட்ட பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களின் குடும்பங்கள் இன்று வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றன. 1992 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 21000 பேருக்கும் மேற்பட்ட பி.எட்கணினி ஆசிரியர்கள் உள்ளனர். அனைவரும் அங்கிகரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றோம். நாங்கள் பெற்ற பட்டம் இன்று பயன் இல்லாமல் வறுமையில் வாடுகின்றோம். TET, TRB போன்ற பட்டதாரி அறிவியல் ஆசிரியர் தேர்வில் கணினி அறிவியல் படித்தோர்க்குதகுதித் தேர்வு இல்லை.AEEO, DEO தேர்வுக்கு அடிப்படை கல்வி பி.எட் ஆனால் கணினி அறிவியலில் பி.எட்பட்டம் பெற்ற எங்களுக்கு அதிலும் வாய்ப்பு இல்லை.உடற்கல்வி,ஓவியம்,தையல்,கணினி ஆகிய "தொழிற்கல்வி" படாங்களுக்கான"சிறப்பாசிரியர்" நியமனத்தில் கூட கணினி அறிவியல் பி.எட் படித்தபட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டனர்­. இந்த ஆசிரியர் பணியிலும் கூட எங்களுக்கு வாய்ப்புகள் இல்லை.


செய்தி :திரு வெ.குமரேசன்மாநிலச் செயலாளர

் 9626545446.

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

பதிவு எண் 655/2014.

2 comments:

  1. Cs paduchu rmba year ah job illama erukom.... ... Yarum ennime cs padikathenga..... Govt this year exam vacha paravala.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி