வட கிழக்குப் பருவ மழை காரணமாக, 9ம் தேதி முதல், பல்கலை, கல்லுாரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது; தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.இந்நிலையில், முதலாம் ஆண்டு பி.இ., - பி.டெக்., செமஸ்டர் தேர்வுடிச., 7ல் துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
அதனால், வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள, 250க்கும் மேற்பட்டகல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து, அவர்கள் கூறியதாவது:மழையால், 18 நாட்களாக கல்லுாரி இயங்காமல், பாடங்கள் பாக்கி உள்ளன. புறநகரில், பல கல்லுாரிகள் இன்னும் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில், கல்லுாரிகளுக்கு செல்லும் வழிகளில், வெள்ளம் வடியவில்லை. இந்த ஆண்டில், புதிய முறை வினாத்தாள் அறிமுகமாகிறது. இந்நிலையில், பாடங்களை முடிக்காமல், மாதிரித் தேர்வும் நடத்தாமல், செமஸ்டர் தேர்வு எழுதினால், மதிப்பெண் குறையும்; தர வரிசையில் பாதிப்பு ஏற்படும்.முதல் செமஸ்டருக்கு, 65 நாள் வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், மழை விடுமுறையால், 12 நாள் வீணாகியது.இன்னும் கல்லுாரி எப்போது திறக்கப்படும் எனத் தெரியவில்லை. எனவே,மழை விடுமுறையை கணக்கிட்டு, தேர்வை தள்ளிவைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Nov 27, 2015
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி