கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் குடும்ப அட்டை, சான்றிதழ் பாதிக்கப்பட்டவர்கள் பதிவு செய்யலாம்: ஆட்சியர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2015

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் குடும்ப அட்டை, சான்றிதழ் பாதிக்கப்பட்டவர்கள் பதிவு செய்யலாம்: ஆட்சியர்

வெள்ளத்தால் குடும்ப அட்டை, சான்றிதழ் பாதிக்கப்பட்டவர்கள் பதிவுசெய்துக் கொள்ளலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் பள்ளி மாணவ -மாணவியர்களின் பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், புத்தகப் பைகள் வெள்ளத்தால் காணாமல் போனதாக வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் புதிய புத்தகம் வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.


அதன்படி, மாணவ–மாணவியர்களுக்கு 10,769 புத்தகங்களும், 4,555 சீறுடைகளும், 687 புத்தக பைகளும் வழங்கப்பட்டுள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடும்ப அட்டை தவறவிட்டவர்களுக்கு வட்ட வழங்கல் அலுவலர் மூலமாக 974 குடும்பஅட்டை வழங்குவதற்கான ரசீது வழங்கப்பட்டுள்ளது. இந்த ரசீதினை வழங்கி குடும்ப அட்டை நகல்கள் அச்சிடப்பட்ட பின்னர் பெற்றுக்கொள்ளலாம்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களது சான்றிதழ்கள் பற்றிய விவரங்களை மகளிர்குழுக்கள் மூலம் கணக்கெடுக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த கணக்கெடுப்பு முடிந்த பின்பு சான்றிதழ்கள் காணாமல் போனவர்களுக்குமீண்டும் சான்றிதழ் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களுடைய காணாமல் போன புத்தகங்கள், சீருடைகள், குடும்ப அட்டை மற்றும் சான்றிதழ்கள் விவரங்களை கணக்கெடுத்து வருபவர்களிடமோ அல்லது சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமோ அல்லது வருவாய்த்துறை அலுவலரிடமோ தெரிவிக்கலாம்.பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி