நிபந்தனையை தளர்த்த மாணவிகள் எதிர்பார்ப்பு! அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2015

நிபந்தனையை தளர்த்த மாணவிகள் எதிர்பார்ப்பு! அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா

மதுரை மாவட்டத்தில் கிராமப்புற பெண் கல்வி ஊக்கத் தொகை பெற ஆண்டுவருவாய் ரூ.25ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த பள்ளி மாணவிகள் எதிர்பார்க்கின்றனர்.பிற்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டடோர் துறை சார்பில் இந்த ஊக்கத் தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.


மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.500ம், ஆறு முதல் 8 ம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.1000ம் வழங்கப்படும். இத்தொகை பெற சம்மந்தப்பட்ட மாணவிகள், பெற்றோர் ஆண்டு வருமான சான்றிதழ் பெற்று,தலைமையாசிரியர்கள் மூலம் கூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலரிடம்சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, துறைக்கு அனுப்பப்படும்.இத்தொகை பெற இந்தாண்டு மாணவிகள் விண்ணப்பிக்கும் போது பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.25 ஆயிரத்திற்குள் இருக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


இது மாணவிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.ஆசிரியர்கள் கூறுகையில், 'நுாறு நாள் வேலைக்கு சென்றாலே தினமும் ரூ.150க்கு மேல் சம்பளம் பெறும் நிலையில், அரசு அறிவுறுத்தலின்படி ஆண்டிற்கு ரூ.36 ஆயிரத்திற்கு குறைந்து வருவாய் சான்று அளிக்க வி.ஏ.ஓ.,க்களே மறுக்கின்றனர். ரூ.25 ஆயிரத்திற்கு எப்படி வருவாய் சான்று பெற முடியும். சான்று இல்லாததால் மாணவிகளின் விண்ணப்பங்களை பெற அதிகாரிகள் மறுக்கின்றனர்,' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி