வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. எனவே பொதுமக்கள், குடிநீரைநன்கு காய்ச்சி குடிக்க வேண்டும்; உள்ளாட்சி நிர்வாகமும், குடிநீர் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்' என, சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் முழுவதும் மூன்று நாட்களாக மழை கொட்டித் தீர்த்துள்ளது. மழைநீர் ஆங்காங்கே தேங்கி, சுகாதாரத்திற்கு சவால்விடும் வகையில் உள்ளது.இதுபோன்ற நேரங்களில், குடிநீரில் கழிவுநீர் கலப்பதோடு, குடிநீர் மாசு படவும் வாய்ப்பு உள்ள. அதனால், பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது:பொதுவாக, குடிநீரை நன்கு காய்ச்சி, ஆற வைத்து குடிப்பது நல்லது. அதுவும், மழைக்காலங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தரமற்ற குடிநீர், நோய் பாதிப்புகளுக்கு காரணம் என்பதால், பொது மக்கள் உஷாராக இருக்க வேண்டும். வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில், குளோரின் அளவை பரிசோதிக்கவும், மாதிரிகள் எடுத்து பாதிப்பு உள்ளதா என கண்டறியவும், உள்ளாட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தவும், சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Nov 10, 2015
Home
kalviseithi
மழைக்கால நோய் பரவும் அபாயம் : குடிநீரை நன்கு காய்ச்சி குடிங்க...!
மழைக்கால நோய் பரவும் அபாயம் : குடிநீரை நன்கு காய்ச்சி குடிங்க...!
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி