தீபாவளி தோன்றிய வரலாறு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2015

தீபாவளி தோன்றிய வரலாறு

தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். இந்த தீபாவளி எப்படி வந்தது என்று பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான்.
அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான்.


இதை அறிந்த மகா விஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார்.அவன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்தய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான். அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி போட்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது, வடமாநிலங்களில் ராவணனை வென்று சீதாப்பிராட்டியை மீட்ட ராமர், அயோத்தி திரும்பிய நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. வால்மீகு ராமாயணத்தில் முதன் முதலாக தீபாவளி பற்றிய குறிப்புகள் உள்ளன.

2 comments:

  1. அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    2013 தமிழ் நாடு தகுதி தேர்வு தேர்ச்சி ( 60 % ) பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு
    வருகின்ற 16 .11.2015 திங்கள் கிழமை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு உண்ணாவிரதம் மேற்கொள்ளபடுகிறது

    அற வழியில் நாம் பாதிக்க பட்டதை தமிழக முதல்வரின் மேலான கவனத்திற்கு எடுத்து செல்வோம்

    முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது . அனுமதி கடிதம் 15.11.2015 மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் .

    அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .
    கலந்து கொள்ளும் அனைவரும் கீழ்க்கண்ட அலைபேசி எண்களுக்கு தங்கள் பெயர் ,ஊர் ,பாடம், மதிப்பெண் , குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை ஆகிய தகவல்களை குறுந்தகவல் மூலம் பகிர்ந்து , பதிவு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .

    கூட்டம் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:

    திருமதி பாரதி : 94426 91704
    திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
    திரு.பரந்தாமன் : 94432 64239
    திரு.சக்தி : 97512 68580
    திரு.லெனின் ராஜ் : 80125 32233

    இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்

    2013 தமிழ் நாடு தகுதி தேர்வு தேர்ச்சி ( 60 % ) பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு
    இது போராட்டம் அல்ல .இது ஒரு நிகழ்ச்சி .

    நம் பாதிப்படைந்ததை உணர்த்த ஒரு அரிய வாய்ப்பு.

    உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் .

    உணர்வுகளை மட்டுமே வெளிபடுத்தவும் .

    எதிமறை எண்ணங்களை தவிர்த்தல் நலம் .

    வேண்டுகோளிற்கிணங்க அனைவரும் தவறாது தங்கள் பெயர் ,பாடம் ,ஊர் மற்றும் குடும்ப உறுபினர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை தவறாது பதிவு செய்து கொள்ளவும்

    இந்நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்

    அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறோம்

    நாள் , இடம் 16 .11.2015 திங்கள் கிழமை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு காலை 10மணி

    கூட்டம் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:

    திருமதி பாரதி : 94426 91704
    திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
    திரு.பரந்தாமன் : 94432 64239
    திரு.சக்தி : 97512 68580
    திரு.லெனின் ராஜ் : 80125 32233

    2013 தமிழ் நாடு தகுதி தேர்வு தேர்ச்சி ( 60 % ) பெற்ற ஆசிரியர்களின்
    கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்ட கோரிக்கைள்

    1. 2013 ல் நடந்த தகுதி தேர்வில் 60 % தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் இல்லாமல் கடந்த 2 வருடங்களாக பெரும்பாலான பெண் ஆசிரியர்களும் ,ஆண் ஆசிரியர்களும் வாழ்வாதாரம் பாதிக்க பட்டிருக்கிறோம் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல. வேண்டியே இந்த அற போராட்டம்

    2. 2013 ல் நடந்த தகுதி தேர்வில் 60 % தேர்ச்சி பெற்ற எங்களுக்கே பணி நியமன ஆணை வழங்க ஆவண செய்ய வேண்டுகிறோம்

    3. தற்போது நடைமுறையில் உள்ள WEIGHTAGE முறையை நிதர்சனமாக ஆராய்ந்து நடுநிலையான முறையாக மாற்ற ஆவண செய்ய வேண்டுகிறோம்

    4.தற்போது உள்ள காலி பணி இடங்களை பாதிக்கப்பட்ட எங்களை கொண்டே பணி நிரப்ப வேண்டுகிறோம்

    ReplyDelete
  2. intha mathiri prout panni inga ulla makala yemathurathey oru velaiya theriringala matha veri puducha naigala

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி