அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜன.,1 கடைசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2015

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜன.,1 கடைசி

சிபிஎஸ்இ நடத்தும் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு (AIPMT) மே1-ம், 2016ம் ஆண்டு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்தியாவில் உள்ள அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் 15 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்தவகையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ்படிப்புகளில் சேர AIPMT என்னும் நுழைவுத்தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தி வருகின்றன. 2016-ம் கல்வியாண்டுக்கான மருத்துவ நுழைவுத்தேர்வு மே 1-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


(ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கும் இந்த நுழைவுத்தேர்வு பொருந்தும்).காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மூன்று மணி நேரம் நடத்தப்படும் இந்தத் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களிலிருந்து 180 கேள்விகள் கேட்கப்படும். இவை அனைத்தும் "அப்ஜெக்டிவ்' (கொள்குறி) வகை தேர்வு முறைக் கேள்விகளாக இருக்கும்.இதற்கு விண்ணப்பிக்க 12-1-2016 கடைசித் தேதியாகும். அபராதத் தொகையுடன் விண்ணப்பிக்க 10-2-2016 கடைசித் தேதியாகும்.இது தொடர்பான மேலும் விவரங்களைwww.aipmt.nic.inஎன்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி