CPS: இன்று -ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் எதிர்கால வாழ்வை ஒழித்து கட்டிய நாள்...நம் ஓய்வூதிய உரிமையை இழந்த நாள்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2015

CPS: இன்று -ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் எதிர்கால வாழ்வை ஒழித்து கட்டிய நாள்...நம் ஓய்வூதிய உரிமையை இழந்த நாள்!!!

ICF ல் கடந்த ஆகஸ்டு 2014 அன்று ஓய்வு பெற்ற திரு.நடராஜன் என்பவர் NPS திட்டத்தில் பெரும் ஓய்வூதியம் வெறும் ரூ. 820/- மட்டுமே. ஆனால் இதுவே இவர் பழைய பென்ஷன் திட்டத்தில் ஓய்வுபெற்றிருந்தால்இவரது ஓய்வூதியம் சுமார் ரூ 12500/- இது மேலும் DA மற்றும் ஊதியக்குழுபரிந்துரைகளின் அடிப்படையில் தொடர்ந்து உயரும் ஆனால் NPS திட்டத்தில் இது போ‌ன்ற எந்த ஒரு உயர்வுக்கும் வாய்ப்பு கிடையாது. சிந்தியுங்கள் தோழர்களே.


அனாதைகளுக்கு அரசு வழங்கும் ஓய்வூதியம் மாதம் ரூ. 1000.குறைந்தபட்சம் 9 மாதம் MP ஆக இருந்தாலே மாதமாதம் ரூ.20000 ஓய்வூதியம்.


ஒரு நாள் MLA வாக இருந்தாலும் மாதாமாதம் ரூ.12,000 ஓய்வூதியம்.ஆனால், CPS ல் உள்ளவர்களுக்கு கட்டிய பணத்தை பெறுவதற்கு உயர்நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை.


CPS/NPS கருப்பு தினம்:


22.12.2003 ஆம் தேதியில் தான் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்காலத்தினை காவு வாங்கிய புதிய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த நாளினை பல முற்போக்கு இயக்கங்கள் " கருப்பு தினமாக" கடைபிடித்து வருகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி