நெடுஞ்சாலைத் துறையில் காலியாகவுள்ள உதவிப் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 28-ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
நெடுஞ்சாலைத் துறையில், 213 உதவிப் பொறியாளர் (கட்டடவியல்) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது.நேர்காணலுக்கு தற்காலிகமாகத் தேர்வு பெற்ற 424 விண்ணப்பதாரர்கள் அவர்களது விண்ணப்பத்தில் தெரிவித்த விவரங்களைச் சரிபார்க்கும் பொருட்டு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 28-ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அழைப்பாணை விவரம் (Notice of Certificate Verification) தேர்வாணையத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள், அழைப்புக் கடிதத்தை தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி