பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு மையங்கள்அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2015

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு மையங்கள்அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வுகளுக்கான செய்முறை தேர்வு நடைபெறும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சா.மார்ஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


வரும் 2016-ஆம் ஆண்டு வரும் ஏப்ரல் மாதம் பத்தம் வகுப்பு தனித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 19, 20, 26, 27 ஜனவரி 2 ஆகிய தேதிகளில் செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது.விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கும், விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கும், உளுந்தூர்பேட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கும் தேர்வு நடைபெறும்.திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் திண்டிவனம் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளயில் மாணவிகளுக்கும், தேசிய மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கும், திருக்கோவிலூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தேர்வு நடைபெறும்.


கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கும், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கும், சங்கராபுரம் அருகே தேவாண்டலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கும், சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கும், சின்னசேலம் அருகே கச்சிராயப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுககும் தேர்வுகள் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி