பெண்கள் விடுதி காப்பாளர் நியமனம்அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2015

பெண்கள் விடுதி காப்பாளர் நியமனம்அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை

பெண்கள் விடுதிகளுக்கு பெண்களை மட்டுமே பாதுகாப்பாளராக நியமிக்க வேண்டும்,'' என, விளையாட்டுத் துறை அமைச்சர் சுந்தர்ராஜ் கூறியுள்ளார்.இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அலுவலர் கூட்டம், அமைச்சர் சுந்தர்ராஜ் தலைமையில், சென்னை, நேரு விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.


இதில், மாநிலம் முழுவதும் உள்ள விளையாட்டு அலுவலர்கள், விளையாட்டு விடுதி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.சட்டசபையில், 110வது விதியின் கீழ் வௌியான அறிவிப்புகளின் செயல்பாடு, தற்போதைய மேம்பாடு, விளையாட்டு உள்கட்டமைப்பு வசதி முன்னேற்றம், விளையாட்டு விடுதிகளின் செயல்பாடு, உலக திறனாய்வு திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.அமைச்சர் சுந்தர்ராஜ் பேசியதாவது:அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் காலம் தாழ்த்த கூடாது. பெண்கள் விடுதிக்கு பெண்களை தான் காப்பாளராக நியமிக்க வேண்டும். விளையாட்டு பள்ளிகளைஅதிகளவில் உருவாக்க வேண்டும். விளையாட்டு வளாகங்களில் நேரில் ஆய்வு செய்து, குறைபாடுகளை சுட்டிக்காட்டியும் சரி செய்யாத விளையாட்டு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாதந்தோறும் மாவட்டங்களில் குழுக்கூட்டம் நடத்த வேண்டும்.விளையாட்டுத்துறையை மேம்படுத்த பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது. எனவே, விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் தனித்திறனை கண்டறிந்து, தேசிய மற்றும் பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வகையில் சிறப்பான பயிற்சி அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி