டெல்டா மாவட்டங்களில் கன மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2015

டெல்டா மாவட்டங்களில் கன மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று மதியம் 12.30 மணிக்கு மழை தொடர்பாக அளித்த பேட்டி வருமாறு:–


குமரி கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. தற்போது அந்த தாழ்வு நிலை மாலத்தீவு அருகே நிலை கொண்டுள்ளது.இதற்கிடையே தென்மேற்கு வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது தொடர்ந்து தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது.இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பாபநாசத்தில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் பருவ மழை நீடிக்கும். பெரும்பாலான உள் மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.


குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களில் மிக கன மழையை எதிர்பார்க்கலாம்.


சென்னை


சென்னையில் பொதுவாக வானம் மேக மூட்டமாக காணப்படும். இடையிடையே மழை பெய்யக்கூடும்.சென்னையில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இல்லை.


இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி