திருவண்ணாமலையில் நாளை மாவட்ட அளவிலான மகளிர் போட்டிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2015

திருவண்ணாமலையில் நாளை மாவட்ட அளவிலான மகளிர் போட்டிகள்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை (டிசம்பர் 5) நடைபெறும் மாவட்ட அளவிலான மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகளில் மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.தேசிய அளவிலான மகளிர் விளையாட்டுப் போட்டிகள் திட்டத்தின் கீழ் 2015-16-ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் சனிக்கிழமை (டிசம்பர் 5) நடைபெறுகிறது.


திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் அன்றைய தினம் காலை 9 மணிக்கு இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், கூடைப்பந்து, உடற்பயிற்சி, கைப்பந்து, புல்வெளி டென்னிஸ், ஹாக்கி, டேபிள் டென்னிஸ்,தடகளம், கபாடி, கோ-கோ, நீச்சல், பூப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன.


மாவட்ட அளவிலான இந்தப் போட்டிகளில் தேர்வு செய்யப்படுவோர், திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பில் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவிகள் 1991 ஜனவரி 1-ம் தேதியன்றோ, அதற்குப் பிறகோ பிறந்தவராக இருக்க வேண்டும். 16 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 25 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் விவரம் அறிய திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அலுவலரை 04175-233169 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி