ஆசிரியர்களின் தொடர் போராட்டம் ஏன்? ஜாக்டோ சார்பில் பிப். 14-இல் கருத்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2016

ஆசிரியர்களின் தொடர் போராட்டம் ஏன்? ஜாக்டோ சார்பில் பிப். 14-இல் கருத்தாய்வு

ஆசிரியர்களின் தொடர் போராட்டம் ஏன்? என்பதை தெளிவுபடுத்தும் வகையில் சென்னையில் பிப்ரவரி 14-இல் கருத்தாய்வு மாநாடு நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜாக்டோ) ஒருங்கிணைப்பாளர் பி.கே. இளமாறன் தெரிவித்தார்.சென்னையில் ஞாயிற்றுக்கிழமைநடைபெற்ற குழுவின் ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்குப் பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:


மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் தொடர்ச்சியாக பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு டிசம்பர் 4-இல் நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டமானது வெள்ளப் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. சட்டப் பேரவைத்தேர்தல் நெருங்கி வருவதால், ஆசிரியர் போராட்டம் ஏன்? என்பதை விளக்கும் வகையில் சென்னையில் பிப்ரவரி 14-இல் கருத்தாய்வு மாநாடு நடத்தப்படும். அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து மாநாட்டுக்கு அழைப்பு விடுப்போம். தேர்தல் அறிக்கையில் கோரிக்கைகளை இடம்பெறச் செய்வோம் என்றார்.

4 comments:

  1. salem district(near attur) mutual transfer vara virupam ulla perambalur district teachers contact to 9551150557

    ReplyDelete
  2. Mutual Transfer=BT ENGLISH ,,, MELMARUVATHUR, KANCHEEPURAM DT to SALEM, NAMAKKAL, DHARMAPURI, ERODE.dt..pls contact=8012998093,7667724789......

    ReplyDelete
  3. MUTUAL TRANSFER-BT(MATHS)-(not deployment post) SALEM DT, MEACHER UNION, GHS KOONANDIYUR TO ERODE DT, PLEASE CONTACT 9942550548

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி