புதிய அரசாணை வருமா??? புது வாழ்வு கிடைக்குமா???? உரிமை முடியாதபள்ளிக்கல்வி அனைவருக்கும் கல்வி இயக்க அரசாணை 177ஆல் 15000க்கும்மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாராம் கேள்விக்குறி??? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2016

புதிய அரசாணை வருமா??? புது வாழ்வு கிடைக்குமா???? உரிமை முடியாதபள்ளிக்கல்வி அனைவருக்கும் கல்வி இயக்க அரசாணை 177ஆல் 15000க்கும்மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாராம் கேள்விக்குறி???

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் ஆணையிடப்பட்டு நூறாண்டுபேசும் ஓராண்டு சாதனைகளில் ஒன்றான 16549 பகுதிநேர ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்க அரசாணை 177ன்படி ஆறு முதல் எட்டுவரையிலான வகுப்புகளில் நூறுக்குமேல் மாணவர்கள் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு வாரம் 3 அரைநாட்கள் என்று மாதத்தில் 12 அரைநாட்கள் பணிபுரிய ஓவியம், உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பாடங்களான கணினி, இசை,தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் பாடங்களை நடத்திட2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமித்தது.


தொடர் கோரிக்கைகளை தொடர்ந்து ஊதியம் மற்றும் பணி நிமித்தம் சார்பாக அவ்வப்போது அறிவுரைகளை, செயல்முறை ஆணைகளை வழங்கியும் மேலும் புதிய அரசாணை186 மூலம் தொகுப்பூதியமும் ரூ.2000 உயர்த்தப்பட்டு ஏப்ரல் 2014 முதல்ரூ.7000ஆக வழங்கப்படுகிறது. அரசாணைப்படி ஒரு ஆசிரியர் ஒன்றிற்கு மேற்பட்டபள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு, மாதத்தின் முதல் தேதியில் ECS முறையில்ஊதியம் போன்றவைகளையே இதுவரை கேட்டும் தீர்வு கிடைக்காததால் – அரசின்திட்டத்தின் அடிப்படையிலான வேலையில் தொடரும் எங்களின்வாழ்வாதாராம்-எதிர்காலம் எல்லாமே அரசின் கைகளிலே!!!!!. எங்களின்எதிர்காலம் அரசு புதிய அரசாணை வெளியிட்டால் மட்டுமே சிறக்கும்!!!!!


15000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின்தொடர் கோரிக்கைகள்

1) நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் 15000க்கும் மேற்பட்டபகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும்.

2) பணியில் இருக்கும்போது மரணமடைந்த பகுதிநேர ஆசிரியர்களின்குடும்பங்களை அரசு தத்து எடுக்க வேண்டும்.

3) பணிநிரவலில் இப்போதும் 100க்கும் குறைவாக மாணவர்கள் உள்ளபள்ளிகளுக்கும் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பணிநிரவலால்தொலைதூரம் சென்று பணி செய்பவர்களுக்கு அருகிலுள்ள பள்ளிகளில் வாய்ப்புகள் வழங்க வேண்டும்.வேலை வாய்ப்பு திண்டாத்தில் நாடு தத்தளிப்பதால் கிடைத்த வேலையை உறுதிசெய்து கொள்ள மன்றாடும் எங்களுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சிகளும், அனைத்துநாளேடுகளும், அனைத்து ஆசிரியர் கூட்டமைப்புகளும், அனைத்து கல்விஇணையதளங்களும் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களிடம் வேண்டுகோள்வைக்கவும் வேண்டுகிறேன்.


அனைவருக்காகவும்

கடலூர் செந்தில் (எ)சி.செந்தில்குமார்,

(9487257203),

கலியமலை ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி,

கடலூர் மாவட்டம்.

7 comments:

  1. Me also same news I agree senthil sir. Thanks kalviseithi admin for publishing part time news.

    ReplyDelete
  2. Me also same news I agree senthil sir. Thanks kalviseithi admin for publishing part time news.

    ReplyDelete
  3. பகுதி நேர ஆசிரியர்கள் தாங்கள் செய்து வந்த (ஓரளவுக்கு தங்களை பிழைப்பூட்டிய தங்கள்)சுய தொழிலையும் விட்டு விட்டு இந்தப்பணிக்கு வந்தனர். ஆனால் இன்றோ எதையுமே செய்ய முடியாத நிலையில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.
    காட்டில்,பற்றி படற ஒரு கொம்பில்லாமல் காற்றில் அலைபாய்ந்த ஒரு முல்லைக் கொடியைப் பார்த்து தனது தேரையே அந்த முல்லைக் கொடியின் அருகில் கொண்டு நிருத்தி, அலைபாய்ந்த கொடியை எடுத்து தன் தேரின் மீது சுற்றிவிட்டு தேரை அங்கேயே விட்டுவிட்டு தனது அரண்மனைக்கு திரும்பி சென்ற பாரி மாமன்னர் வாழ்ந்த நாடு நம் தமிழ்நாடு. அந்த மன்னில் முல்லை கொடிகளைப் போல் பகுதி நேர ஆசிரியர்கள் வாழ்வாதாரம் எனும் கொம்பை பற்றி படறமுடியாமல் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒருவேளை தேசத்து ஆட்சியாளர்களின் பார்வையில் பகுதி நேர ஆசிரியர்களின் அவல நிலை படவில்லையோ!! இரக்கம் கிடைக்குமா! நாங்கள் பற்றி படற ஒரு கொழு கொம்பு கிடைக்குமா! நம் நாட்டு அரசியார் மாண்புமிகு அம்மா அவர்களின் பார்வைக்கு நமுடைய அல்லல்களை (அமைச்சர்களும், அதிகாரிகளும்) தெரிவித்திருப்பார்களா!!! பதிவிடுவோம் நம்முடைய அவலங்களை.
    ""தொல்லை கொடுப்பதற்கு அல்ல""
    "நாம் பற்றி படற ஒரு கொம்பு தோன்றுவதற்கு " பணிவுடன் பதிவிடுவோம்

    ReplyDelete
  4. We expecting new life from amma.pls dont kill.

    ReplyDelete
  5. திரு செந்தில் அவர்களே பகுதி நேர ஆசிரியர்கள் 15000 நபர்களுக்கு நிரந்தர பணி வழங்கினால் 18 முதல் 20 ஆண்டுகள் காத்திருக்கும் ஆசிரியர்கள் ,தெருவில் திருஒடு எடுக்கட்டுமா ?

    ReplyDelete
  6. திரு செந்தில் அவர்களே பகுதி நேர ஆசிரியர்கள் 15000 நபர்களுக்கு நிரந்தர பணி வழங்கினால் 18 முதல் 20 ஆண்டுகள் காத்திருக்கும் ஆசிரியர்கள் ,தெருவில் திருஒடு எடுக்கட்டுமா ?இது சரியா

    ReplyDelete
  7. திரு செந்தில் அவர்களே பகுதி நேர ஆசிரியர்கள் 15000 நபர்களுக்கு நிரந்தர பணி வழங்கினால் 18 முதல் 20 ஆண்டுகள் காத்திருக்கும் ஆசிரியர்கள் ,தெருவில் திருஒடு எடுக்கட்டுமா ?இது சரியா?இது சுயநலம் அல்லவா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி