ஏழாவது ஊதியக் கமிஷன் பரிந்துரையை செயல்படுத்த உயர்நிலைக் குழு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 14, 2016

ஏழாவது ஊதியக் கமிஷன் பரிந்துரையை செயல்படுத்த உயர்நிலைக் குழு

ஏழாவது ஊதியக் கமிஷன் பரிந்துரையை செயல்படுத்த உயர்நிலைக் குழுவைஅமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் 47 லட்சம் பேர், ஓய்வூதியதாரர்கள் 52 லட்சம்பேரின் ஊதியத்தைமாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்ட 7வது ஊதியக் கமிஷன் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.


இதன்படி, புதிய சம்பளம் இம்மாதம் 1ம் தேதி அமல்படுத்தப்பட வேண்டும். இதனால் இந்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.1.02 லட்சம் கோடி செலவாகும். இதன் மூலம் ஏற்படும் நிதிப்பற்றாக்குறையை அரசு சமாளிக்கும் என நிதியமைச்சர் ஜெட்லி ஏற்கனவே கூறிவிட்டார். இந்நிலையில் 7வது ஊதிய கமிஷன் பரிந்துரை செயல்படுத்துவதற்கு, உயர்நிலைக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி