பரிசுத் தொகை அதிகரித்தும் தமிழில் படைப்பாற்றல், பேச்சாற்றல் போட்டிகளில் பங்கேற்க தயங்கும் மாணவர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2016

பரிசுத் தொகை அதிகரித்தும் தமிழில் படைப்பாற்றல், பேச்சாற்றல் போட்டிகளில் பங்கேற்க தயங்கும் மாணவர்கள்

தமிழில் படைப்பாற்றல் மற்றும் பேச்சாற்றல் போட்டிகளில்மாணவர்கள் பங்கேற்க தயக்கம் காட்டி வருவது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.


தமிழில்படைப்பாற்றல் மற்றும் பேச்சாற்றலை மாணவர்கள் மத்தியில்வளர்க்கும் வகையில், கல்லூரி மாணவர்களுக்கு புதன்கிழமையும், பள்ளி மாணவர்களுக்கு வியாழக்கிழமையும்,தமிழகம் முழுவதும் போட்டிகள் நடத்தப்பட்டன.மாவட்ட அளவிலான இந்த போட்டிகளில் முதலிடம் பெறுவோருக்கு ரூ.10ஆயிரமும், 2ஆம் இடத்துக்கு ரூ.7ஆயிரமும் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவர்கள், மாநில போட்டிக்கு பரிந்துரைசெய்யப்படுவார்கள் என்றும், அதில் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.15 ஆயிரம், ரூ.12 ஆயிரம், ரூ.10 ஆயிரம் வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பேச்சுப் போட்டிக்கு, கல்லூரிகள் சார்பில் 15 பேர், பள்ளிகள் சார்பில் 17 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அதே போல் கட்டுரைப் போட்டியில் 13 பேர் (கல்லூரி), 19 பேர் (பள்ளி), கவிதைப் போட்டியில் 13 பேர் (கல்லூரி), 17 பேர் (பள்ளி) கலந்து கொண்டனர். இதில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 14 பேர் மட்டுமே பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.மழலையர் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழில் படைப்பாற்றலையும் பேச்சாற்றலையும் வளர்க்க நடத்தப்படும் போட்டிகளில் குறைவான மாணவர்கள் பங்கேற்றது போட்டி நடுவர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள்செயல்பட்டு வரும் நிலையில், பள்ளிக்கு ஒரு மாணவர் வீதம் பங்கேற்றாலும் கூட, குறைந்தபட்சம் 200 பேர் வந்திருக்கலாம்.

போட்டிக்கான பரிசுத் தொகை கடந்த காலங்களில் ரூ.1000, ரூ.500 வீதம் வழங்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும், மாணவர்களின் எண்ணிக்கைஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது.இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த வகை போட்டிகளுக்கு, முன்கூட்டியே தயார் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. போட்டி நடைபெறும்இடத்தில் தலைப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம், மாணவர்களின் சமயோஜித அறிவுத்திறன் மேம்படும்.

மேலும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்தித்து செயல்படும் திறனும் அதிகரிக்கும்.பரிசுத்தொகையும் கூடுதலாக இருப்பதால், ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் மாணவர்களின் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்பதில் அந்தந்த தலைமையாசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி