TNPSC :உதவி மருத்துவ அலுவலர் பணிக்கு 20-ம் தேதி முதல் சென்னையில் நேர்முகத் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 14, 2016

TNPSC :உதவி மருத்துவ அலுவலர் பணிக்கு 20-ம் தேதி முதல் சென்னையில் நேர்முகத் தேர்வு

டிஎன்பிஎஸ்சி செயலாளர் எம்.விஜய குமார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:


இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் 2014-ம் ஆண்டுக்கான 83 உதவி மருத்துவ அலுவலர் (சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி) காலிப் பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு கடந்த 31.05.2015 அன்று எழுத்துத் தேர்வு நடைபெற் றது. அப்பதவிக்கான நேர்காண லுக்கு 191 பேர் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அதில் 8 பேருக்கு வருகிற 19-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. அதன் பின்னரே அவர்களின் நேர்காணலுக் கான தகுதி இறுதி செய்யப்படும். உதவி மருத்துவ அலுவலர் பணிக்கான நேர்காணல் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும்.


நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பாணை விண்ணப்பதாரர்களுக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள் ளது. அழைப்பாணை விவரம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்திலும் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அழைப் பாணையை இணையதளத் திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு விண்ணப்ப தாரர்களுக்கு குறுஞ்செய்தியும், மின்னஞ்சலும் அனுப்பப் பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நாளில் கலந்து கொள்ளாதவர்களுக்குமறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி