அதிமுக அனுதாபிகளுக்கு டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவி: 11 பேரின் நியமனத்தை எதிர்த்து வழக்கு - உயர் நீதிமன்றத்தில் பாமக, திமுக தொடர்ந்தன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2016

அதிமுக அனுதாபிகளுக்கு டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவி: 11 பேரின் நியமனத்தை எதிர்த்து வழக்கு - உயர் நீதிமன்றத்தில் பாமக, திமுக தொடர்ந்தன.

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக அதிமுகவினர் 11 பேரின் நிய மனத்தை எதிர்த்து பாமக மற்றும் திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.சமூக நீதிக்கான வழக் கறிஞர் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:


அரசியல் சாசன சட்டத்தின்படி டிஎன்பிஎஸ்சி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பு. ஆனால், தமிழக அரசு பரிந்துரையின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக ஆர்.பிரதாப்குமார், வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன், ஏ.வி.பாலுச்சாமி, எம்.மாடசாமி, வி.ராமமூர்த்தி, பி.கிருஷ்ணகுமார், ஏ.சுப்பிரமணியன், என்.பி.புண்ணிய மூர்த்தி, எம்.ராஜாராம் ஆகிய 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இப்பதவியில் நியமிக்கப்படு பவர்கள் 6 ஆண்டுகளுக்கு எந்த குறுக்கீடும் இல்லாமல் பதவி வகிக் கலாம். இப்பதவியில் நியமிப் பதற்கு அரசியலமைப்பு சட்டத்தின் படி அரசியல் சார்பின்றி வெளிப் படையான பல்வேறு சிறப்பு தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.டிஎன்பிஎஸ்சி மற்றும் அதன் செயல்பாடுகள் என்ன என்பதை அறியாதவர்களை, கொஞ்சம் கூட அனுபவம் இல்லாத இளம் வயதினரை இதன் உறுப்பினர் களாக தற்போது நியமித்துள்ளனர். இதில் பெரும்பான்மையானவர்கள் அதிமுக அனுதாபிகளாகவும், அரசு வழக்கறிஞர்களாகவும், அதிமுக வழக்கறிஞர் அணி யில் உள்ளவர்களாகவும் இருக் கின்றனர். மேலும் இவர்கள் அனைவரும் ஒரே குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

 பெண்கள் ஒருவர் கூட இப்பதவியில் அமர்த்தப்படவில்லை. டிஎன்பிஎஸ்சி வரலாற்றிலேயே இப்போதுதான் இத்துறைக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் அதிக மாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வின் மூலம் அதிமுக அரசு தனது பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளது.அதிமுகவினரான நவநீத கிருஷ்ணன், நட்ராஜ் போன்றவர்கள் டிஎன்பிஎஸ்சி தலைவர்களாக நியமிக்கப்பட்டு, அதன் பிறகு இப்போது அதிமுகவில் அங்கம் வகிக்கின்றனர். எனவே இந்த 11பேரின் நியமனத்தையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.இந்நிலையில் இதே கோரிக் கையை வலியுறுத்தி திமுக சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கல் செய்த வழக்கை அவசர மனுவாக விசாரிக்கக்கோரி மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் நேற்று நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு கோரினார். அதை ஏற்க மறுத்த நீதிபதி இன்று விசாரிப்பதாக கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி