ஆசிரியர்கள் போராட்டத்திற்கு கருணாநிதி பொறுப்பு ஏற்கவேண்டும் என்பதா? மக்கள்நல கூட்டணி தலைவர்களுக்குகோ.சூரியமூர்த்தி கண்டனம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2016

ஆசிரியர்கள் போராட்டத்திற்கு கருணாநிதி பொறுப்பு ஏற்கவேண்டும் என்பதா? மக்கள்நல கூட்டணி தலைவர்களுக்குகோ.சூரியமூர்த்தி கண்டனம்.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் (என்.ஜி.ஓ.சங்கம்) முன்னாள் தலைவர் கோ.சூரியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
–6–வது ஊதிய குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியபோது ஆட்சியில் இருந்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அவரிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அவர் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை.


ஆனால் தற்போது நடைபெற்று வரும் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும் என கூறியுள்ளார். இப்போது நடைபெறும் போராட்டத்திற்கு கருணாநிதியும் பொறுப்பு ஏற்கவேண்டும் என்று மக்கள்நல கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் முத்தரசன் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அரசியல் உள்நோக்கத்திற்காக கருணாநிதி மீது பழி சுமத்துவதை போல அறிக்கை விடுவது தவறானது.5–வது, 6–வது ஊதிய குழுவை அமல்படுத்தியவர் கருணாநிதிதான். அதிகாரிகளின் குளறுபடியால் சில பிரிவினரின் ஊதிய பாதிப்புகள் நீண்டுகொண்டே இருக்கின்றன.

 மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கப்பட்டது மகிழ்ச்சிதான் என்றாலும் அதில் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நீக்கவேண்டியது முக்கியமானது. அதன் அடிப்படையில்தான் ஆசிரியர்களின் இந்த போராட்டத்தை கருணாநிதி ஆதரித்து வருகிறார்.பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய முறையை கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை மிக முக்கியமானது. அனைத்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஒத்தக்கருத்துடன் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

இவவாறு கோ.சூரியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி