சென்னை: ''ஆதார் அட்டை இருந்தால், மூன்றே நாட்களில் பாஸ்போர்ட் வழங்கும் புதிய திட்டம், அமல்படுத்தப்பட்டு உள்ளது,'' என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பாலமுருகன் கூறினார்.இது குறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி:
சாதாரண முறையில் விண்ணப்பிக்கும் போது, போலீஸ் அறிக்கை பெற்று, பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு கட்டணம், 1,500 ரூபாய். இந்த நடைமுறையை, வெளியுறவு துறை அமைச்சகம் மாற்றம் செய்துள்ளது. இனிமேல் சாதாரணமுறையில், 1,500 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் போது, 'ஆதார்' அட்டை, 'பான்கார்டு' எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் சுய ஒப்புதல் அளிக்கும் இணைப்பு - 1 படிவம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பம் வழங்கினால், போலீஸ் அறிக்கை பெறாமல், பாஸ்போர்ட் வழங்கப்படும். இதன்பின், போலீஸ் அறிக்கை பெறப்படும்.பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மீது, விரைந்து நடவடிக்கை எடுக்க, புதிய முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும், 'தத்கல்' முறையும் அமலில் உள்ளது; அதற்கு கட்டணம், 3,500 ரூபாய்.
வசதியான நேரம்
ஆவணங்கள் சரிபார்ப்பு பணிக்கு, விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் ஆஜராக, 'ஆன்லைனில்'தேதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே பெற வேண்டும். திங்கள் முதல், வெள்ளிக் கிழமை வரையிலான, ஐந்து நாட்களில், எந்த நாளிலும் வசதிப்பட்ட நேரத்தில் நேரில் ஆஜராவதை, ஆன்லைனில் உறுதி செய்யலாம். ஒரு முறைஉறுதி செய்த தேதியை, மாற்றிக் கொள்ளவும் முடியும்.
மொபைலில் அறிக்கை
போலீஸ் அறிக்கை பெற, விண்ணப்பதாரரின் விவரங்கள், மொபைல் போன் மூலம் அனுப்பும் முறை, தமிழகத்தில் விரைவில் அமலுக்கு வர உள்ளது. போலீசாரின் மொபைல் போனுக்கு, விண்ணப்பதாரரின் விவரங்கள் அனுப்பப்பட்டு,போலீஸ் சரிபார்ப்பு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட, 21 நாட்களுக்கு முன், மொபைல் போன் மூலம் அறிக்கையை பெற முடியும். பாஸ்போர்ட் உதவிமையங்கள், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் மூலம், அனைத்துமாவட்டங்களிலும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படுகின்றன; இதற்கு, சேவை கட்டணம், 100 ரூபாய்.நீட்டிப்புமழை வெள்ளத்தில் பாஸ்போர்ட் சேதமடைந்தோருக்கு, கட்டணமின்றி புதிய பாஸ்போர்ட் வழங்கும் வசதி, பிப்., 7 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பாஸ்போர்ட் தொடர்பானவிசாரணைகள் மற்றும் ஆவணங்களை பெற, பாஸ்போர்ட் அலுவலகங்களில், சமூக தணிக்கை மையம் துவங்கப்பட்டு உள்ளது. ஹஜ் பயணத்துக்கு பாஸ்போர்ட் கோருபவர்கள், பிப்., 8 வரை விண்ணப்பம் அளிக்கலாம். இவ்வாறு பாலமுருகன் கூறினார்.விண்ணப்பதாரர்கள், 1,500 ரூபாய் கட்டணத்துடன், ஆதார்அட்டை, பான்கார்டு மற்றும் சுய ஒப்புதல் அளிக்கும் இணைப்பு - 1 படிவம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கினால், போலீஸ் அறிக்கை பெறாமல் பாஸ்போர்ட் வழங்கப்படும்.
கே.பாலமுருகன்
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர்
Feb 4, 2016
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி